Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 04, 2012

ரயில் டிக்கெட் முன்பதிவு: மொபைல்போனில் எளிது

மொபைல்போன் மூலமாக, ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கு, ரயில்வே துறை புதிய வசதியை துவக்கி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி வந்த பிறகு, பலருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. இதில், அடுத்த கட்டமாக, மொபைல்போனை பயன்படுத்தி, ரயில் பயண முன்பதிவு டிக்கெட் பெறும் வசதியை, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

இன்டர்நெட் வசதி கொண்ட மொபைல்போன்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும். இவ்வசதியுள்ளவர்கள், முதலில் மொபைல்போன் மூலமாக, தனது பெயர் மற்றும் பல தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை, முன்பதிவு மையம் பயணிக்கு வழங்கும். அதன் பிறகே, டிக்கெட் முன்பதிவை செய்ய இயலும். முன்பதிவு செய்ததும், பயணிக்கு பி.என். ஆர்.எண், ரயில் எண், பயணத் தேதி, எந்த வகுப்பு போன்ற தகவல்கள் (எலக்ட்ரானிக் ரிசர்வேஷன் ஸ்லிப்) அனுப்பப்படும்.

இப்புதிய வசதி காரணமாக, பயணிகள் அத்தகவல்களை பிரின்ட் அவுட் எடுக்கத் தேவையிருக்காது. தங்களது மொபைல்போனில் பதிவான தகவல்களை, ரயில் பயணத்தின் போது காண்பித்தால் போதுமானது. முதல் கட்டமாக துவக்கப்பட்டுள்ள இவ்வசதியை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான சேவைக் கட்டணம், இ-டிக்கெட் பெறும்போது வசூலிக்கப்படுவதைப் போன்றே, தூங்கும் வசதிக்கு ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாயும், உயர் வகுப்புகளுக்கு, 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...