Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 12, 2012

ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை கைது கூடாது – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அச்சத்தால் ஒருவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை தவிர அரசியல் சட்டத்தின் 21-ஆம் பிரிவு அறிவுறுத்தும் தனிநபரின் வாழ்வதற்கான
சுதந்திரத்தை மறுக்க முடியாது. இதற்கு புறம்பான முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகளான அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார், ஜெ.சலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய
உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவில் கூறியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 22-வது பிரிவுகள் கூறும் குறிப்பிட்ட சூழல்களை தவிர வேறு எதற்கும் முன்னெச்சரிக்கை காவல் கூடாது. நிரந்தர குற்றவாளி, ஏராளமான வழக்குகளில் பங்கு, முன்பு முன்னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர் ஆகிய முந்தைய கால அனுபவங்கள் ஒருவரை முன்னெச்சரிக்கையாக காவலில் வைப்பதற்கு காரணங்களாக கூறுவதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அரசியல் சட்டம் உறுதிச்செய்யும் தனிநபர் சுதந்திரம் விலைமதிப்பற்றது. முன்னெச்சரிக்கை காவல் தொடர்பான சட்டங்களில் இத்தகைய உரிமைகளுக்கு நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆதலால் தேசம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் விருப்பங்களுக்கும் அல்லது சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் சூழலிலும் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் யும்மான் ஸோமன்டோ என்பவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைப்பதற்கான கீழ் நீதிமன்ற உத்தரவை உறுதிச்செய்த குவஹாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவருடைய மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற பெஞ்ச் இக்கருத்தை தெரிவித்தது. யும்மானின் முன்னெச்சரிக்கை காவலை ரத்துச்செய்த உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...