Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 16, 2012

விரிவான வாய்ப்புகளைக் கொண்ட ஹோம் சயின்ஸ் படிப்புகள்

ஹோம் சயின்ஸ் பாடம் என்பது வெறும் சமையல் தொடர்பானது மட்டுமல்ல. அதன் அம்சங்கள் வெகு சிறப்பானவை.

சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டதுதான் ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல். வீட்டு நிர்வாகம் என்பது, அப்பாடத்தின் ஒரு சிறிய பிரிவே ஆகும்.

ஹோம் சயின்ஸ் என்பது வீடு மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை செம்மைப்படுத்தி, அதனுடன் சேர்த்து சுற்றுப்புறத்தையும் மாற்றுவதற்குரிய அம்சங்களைக் கொண்டதாகும். இந்தப் படிப்பானது தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் ப்ராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகல் பணியையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு, அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பாடமானது, பெண்களுக்கான வெறும் சமையல் சார்ந்தது என்ற தப்பான எண்ணம் சமூகத்தில் பலருக்கும் உள்ளது.
அன்றாட வாழ்வில் அறிவியல் நுட்பங்களை பயன்படுத்தப் பழகிக் கொள்வது இப்படிப்பின் முக்கிய அம்சம். ஒரு நபரின் முழு அளவிலான ஆளுமையை வளர்ப்பது இப்படிப்பின் நோக்கமாகும்.

பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் படித்தால், 3ம் வருட படிப்பின்போது, தனக்கான சிறப்பு பிரிவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்படும் பலவித நோய்களால், ஹோம் சயின்ஸ் படிப்பில் உணவு மற்றும் சத்துணவு துறை அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. எனவே, இந்தப் படிப்பை வழங்குவதில் சில கல்வி நிறுவனங்கள் அக்கறை காட்டுகின்றன.

ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள், உணவு அறிவியல் துறை நிபுணர்கள், விளையாட்டுத் துறையில் ஆலோசகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாளர்கள் உள்பட, பலவிதமான துறைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், டாபர்(Dabur) போன்ற இயற்கை உணவு தயாரிப்பு நிறுவனங்களில், ஆராய்ச்சியாளர் பணியில் நியூட்ரீஷியன்கள் மற்றும் டயடீஷியன்கள் சேரலாம். ஒரு இளநிலைப் பட்டதாரிக்கான ஆரம்ப சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம். முதுநிலைப் பட்டதாரிகள் ஆரம்ப சம்பளமாக ரூ.40,000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், இத்துறையில் அனுபவம் பெற்றுவிட்டால், சம்பளம் மிக அதிகமாக இருக்கும்.

ஹோம் சயின்ஸ் படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
Institute of Home Economics - Delhi university
G.B. Pant university - Pant nagar
Avinashilingam university - Coimbatore
H.P.Krishi Vishwavidyalaya - Himachal pradesh
Kurukshetra university - Kurukshetra
M.S. university - Baroda
Lucknow university - Lucknow
SNDT Women&'s university - Mumbai

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...