Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 21, 2012

ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு

ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா அபுல் காஸிம் நுஃமானி கூறியுள்ளார். அனைத்து முஸ்லிம்களின் மார்க்க உணர்வுடன் தொடர்புடைய பிரச்சனை என்பதால் ருஷ்டியின் தீர்மானத்தில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளர் முஹம்மது சலீம் தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீதான எதிர்ப்பை தவிர இலக்கியத் திருவிழா மீதான எதிர்ப்பு அல்ல. இறைத்தூதரை குறித்து மோசமாக எழுதிய ருஷ்டி மார்க்க ரீதியாக ஒரு க்ரிமினல் ஆவார்.

கருத்து சுதந்திரம் என்பது ருஷ்டியைப் போல எழுதுவதற்கான உரிமை அல்ல. ரகசிய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் தான் இந்திய வருகையை ரத்துச்செய்வதாக ருஷ்டி கூறுவது நாடகமாகும் என முஹம்மது சலீம் கூறியுள்ளார்.

ருஷ்டி இந்திய வருகையை ரத்துச் செய்ததை தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் அவரை எதிர்த்து நடத்தவிருந்த போராட்டத்தை ரத்துச்செய்துள்ளன.

அதேவேளையில், ருஷ்டியின் தீர்மானம் அவர் தனிப்பட்ட ரீதியில் எடுத்ததாகும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் திக்விஜய்சிங் லக்னோவில் தெரிவித்துள்ளார். ருஷ்டி இந்தியாவுக்கு வருகை தர விசா தேவையில்லை என சிங் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...