Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 07, 2011

போலிசுக்கு தலைவலி; குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்!

புதுடெல்லி: தொடர்பு எண்களை மாற்றிக்கொள்ளாமலே, வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் புதிய வசதியை அமல்படுத்தியுள்ளது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்த வசதி, வாடிக்கையாளருக்கு வரப்பிரசாதமாக அமைந்த போதிலும், குற்ற வழக்குகளை கையாளும் காவல்துறையிருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

ஒரு வாடிக்கையாளராக இருப்பவர், வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறுவதாக இருந்தால்... ஏற்கனவே, தான் பயன்படுத்தி வரும் மொபைல்போன் எண்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தாங்கள் பயன்படுத்தும் எண்ணுக்குரிய மொபைல்போன் சேவை நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணத்தை செலுத்தியபின், அதற்குரிய ஆவணங்களுடன், புதிதாக மாற விரும்பும் மொபைல்போன் நிறுவனத்திடம் விண்ணப்பித்தால் போதும்; பழைய மொபைல்போன் எண்களை பயன்படுத்திக்கொண்டே, புதிய மொபைல்போன் நிறுவனத்தின் சேவையை பெற முடியும். இந்த அறிவிப்பானது மொபைல்போன் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதே வேளையில், சிறப்பு புலன் விசாரணை காவல்துறையினர் ஏஜன்சிகளும், குற்ற வழக்குகளை கையாளும் காவல்துறையிருக்கு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். காரணம், மொபைல்போன்களை பயன்படுத்தி குற்றம்புரியும் நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்கின்றனர். ஒரு நபர், அறிமுகமில்லாத ஒருவருக்கு மொபைல்போனில் பேசி மிரட்டல் விடுத்தாலோ, "எஸ்.எம். எஸ்.,' மற்றும் "எம்.எம்.எஸ்.,' அனுப்பினாலோ, சம்பந்தப்பட்ட மொபைல்போன் எண்களை வைத்தே குற்றவாளியின் முகவரியை காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர்.

இதற்கு, மொபைல்போன் சேவை நிறுவனங்களும் உதவுகின்றன. "டிராய்' அறிவித்துள்ள புதிய வசதியால், குற்றவாளிகளின் முகவரியை எளிதாக அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமாகி விடும். ஒரே நிறுவனத்தின் மொபைல்போன் எண்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டால், அந்த எண்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அளித்து, வாடிக்கையாளரின் முகவரியை பெற்று காவல்துறையினர் கைது செய்து வந்தனர்.

"டிராய்' அறிவிப்பின்படி, ஒரு மொபைல்போன் நிறுவனத்திடம் சேவை பெற்ற நபர், அடுத்தடுத்து வெவ்வேறு நிறுவனங்களின் சேவைக்கு மாறினால், ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நிறுவனத்திடமும் விசாரணை நடத்திய பிறகே, கடைசியாக சேவை அளிக்கும் நிறுவனத்தை கண்டறிய முடியும். அதன்பிறகே, அந்த நிறுவனத்தின் உதவியுடன், குற்றவாளியின் முகவரியை சேகரிக்க முடியும். இதனால், கால விரயம் ஏற்பட்டு குற்றவாளிகள் தப்பிவிடும் வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி -மணற்கேணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...