Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 13, 2011

ஒரு வயது குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ நிதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரையில் உள்ள குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற ரூ.1 லட்சம் வரையில் நிதி உதவி பெறும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தெரிவித்தார்.

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடலூர் சாலை-கும்பகோணம் சாலை இணைக்கும் பிரதான சாலை திறப்பு விழா, இலவச கலர் டி.வி. வழங்கும் விழா, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் விழா பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

விழாவில் இலவச கலர் டி.வி.க்களையும், கர்ப்பிணிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது.

தற்போது நகராட்சிப் பகுதியில் இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் 10 லட்சம் கலர் டி.வி.க்கள் தேவைப்படுகிறது. இதை வாங்குவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எடுத்து உள்ளது.பள்ளியில் படிக்கும் 69 லட்சம் மாணவர்களுக்கு தினந்தோறும் முட்டை வழங்கப்படுகிறது. இதுவரையில் 23 லட்சம் கர்ப்பிணிகள் நிதி உதவி பெற்றுள்ளனர். 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகிறது.இதனால் வரும் தேர்தலில் நன்றியை காட்ட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் முருகேசன், வழங்கல் அலுவலர் கல்யாணம், நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், பொதுப்பணித் துறை பொறியாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகராட்சி ஆணையர் சு.அருணாசலம் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புசெல்வி, நகர மன்ற துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, வட்டாட்சியர் அ.அனந்தராமன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மங்கலம், திமுக நகரச் செயலர் கே.ராஜேந்திரன், அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வெங்கட்ராமன் மற்றும் பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...