Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 03, 2011

'இந்திய மனித உரிமை நிலவரம்'

பயங்கரவாத சந்தேக நபர்களை இந்திய பொலிஸார் சித்ரவதை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இந்தியாவின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மறுசீரமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லுகின்ற நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, அப்படியான அதிருப்தி, தீவிரவாத அமைப்புக்களின் ஆட்சேர்ப்புக்கு வலுவூட்டலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த தசாப்த காலத்தில் பல இந்திய நகரங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சந்தைகளும், ரயில் வண்டிகளும், கோயில்களும் மற்றும் மசூதிகளும் இலக்கு வைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் பலவற்றுக்கு இந்திய முஜாஹிதீன் அமைப்பு மீதே குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த அமைப்பு இந்தியாவிலேயே உருவான ஒன்று என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

இப்படியான ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் சந்தேக நபர்கள் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் பின்னர் அந்த தாக்குதல்களுடனான தமது தொடர்பு குறித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதும் உண்டு.

ஆனால், இப்படியான பல குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சந்தேக நபர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரேயே பெறப்படுவதாக ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகின்றது.

2008 இல் 150 பேருக்கும் அதிகமானோர் பலியாக காரணமான மூன்று தாக்குதல்களுக்கு பின்னரான நிகழ்வுகள் குறித்து தாம் ஆய்வுகளை நடத்தியதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இதற்கு அரசாங்கம் கருத்து கூறாது என்று ஒரு அரசாங்க தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்
நன்றி :BBC

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...