Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 02, 2011

எகிப்தின் மக்கள் திரள்!!

எகிப்தின் மண்ணில் புயலாக வீசும் மக்கள் திரள் போராட்டத்தினால் முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹுஸ்னி முபாரம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முபாரக்கை ஆட்சியை விட்டு அகற்றியே தீருவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் பெருந்திரளாக கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவளித்துள்ளன.

எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக்கோரி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியுள்ளனர். மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி படையெடுத்து வந்தனர். கட்டுங்கடங்காத மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இதைப்போன்று அலெக்ஸாண்ட்ரியாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே எகிப்தின் பழம்பெரும் கட்சியான, வஃப்தின் தலைமையில் முக்கிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய கூட்டணிக்கு முயன்று வருகின்றனர். முபாரக்கிற்கு அதிகாரத்தில் நீடிக்க தார்மீகரீதியாக உரிமையில்லை என வஃப்த் கட்சி கூறுகிறது.

அதேவேளையில், ஹுஸ்னி முபாரக்குடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என இஸ்லாமிய கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்த பொழுதும்,பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்கிறார் முபாரக்
-பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...