Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 20, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. குழு துபை செல்கிறது!

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் தவறு செய்தவர்கள் யார்? பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார்? லாபம் அடைந்தவர்கள் யார்? யார்? என்று பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல் கட்டமாக அலைவரிசை ஒதுக்கீட்டில் எப்படி முறைகேடு நடந்தது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த், ராஜாவின் தனிச் செயலாளர் சந்தோலியா, ஸ்வான்-டிபிரியாலிட்டி நிறுவனத்தின் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராசா உள்ளிட்ட 4 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது முதல்கட்ட விசாரணையைத்தான் முடித்துள்ளனர். இவர்களிடம் பெற்ற தகவல்கள் அடிப்படையிலும், ஏற்கனவே கைப்பற்றியுள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் அடுத்தக்கட்ட விசாரணையை முடுக்கி விட சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.

அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இந்த அடுத்தக் கட்ட விசாரணை நடைபெறும். ஏற்கனவே ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து விட்டனர். இன்னும் 6 தொலை தொடர்பு நிறுவனங்கள் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தும்போது பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.விசாரணைக்கு வர வழைக்க சம்மன் அனுப்பும் நடவடிக்கையை சி.பி.ஐ. தொடங்கியுள்ளது. மார்ச் 1-ந்தேதிக்குள் சம்மன் அனுப்பி வரவழைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விசாரணையை முடித்து விட வேண்டும் என்று சி.பி.ஐ. இலக்கு வைத்துள்ளது.

முதலில் டாடா தொழில் குழுமத்தின் ஆர்.கே. கிருஷ்ண குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அணில் அம்பானி போல பல கோடீசுவரர்கள் அடுத்த வாரம் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வர நேரிடும். எனவே அடுத்த வாரம் முழுவதும் சி.பி.ஐ. யின் விசாரணை மிகுந்த பரபரப்பு ஏற்படுத்துவதாக இருக்கும்.

அலைவரிசை ஒதுக்கீட்டை இடைத்தரகர்கள் மூலம் வாங்கிய பல தனியார் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை லாபமாக சம்பாதித்தன. அந்த நிறுவனங்களின் முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் சி.பி.ஐ. யிடம் சிக்கி உள்ளது. எனவே அடுத்த வாரம் முக்கிய பிரமுகர்கள் பலரை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்சி அடைய வைக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் இடையே ஏற்பட்ட தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கம்பெனி சட்ட வாரியத்திடம் சி.பி.ஐ. கருத்து கேட்டுள்ளது.

அந்த கருத்து முடிவு கிடைத்ததும் தொழில் அதிபர் அணில் அம்பானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆவணங்களை சி.பி.ஐ. ரெய்டு நடத்தி கைப்பற்றி வைத்துள்ளது.

இந்த ஆவணங்களை படித்து பார்த்து ஆய்வு செய்ய கூடுதல் அதிகாரிகளை சி.பி.ஐ. மேலிடம் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு பிரிவினர் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளனர். அலைவரிசை ஒதுக்கீட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு ஹவாலா மூலம் எப்படி பணம் கை மாறியது என்ற விசாரணையை துபாயில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்துவார்கள்.

டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பல்வா மற்றும் சென்னை ரியல்-எஸ்டேட் தொழில் அதிபர் சாதிக் பாட்சா ஆகியோர் துபாயில் உள்ள சிலரது பெயர்களை சி.பி.ஐ.யிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அதன் பேரில்தான் சி.பி.ஐ. குழு துபாய் செல்ல உள்ளது.

Source: dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...