Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 23, 2011

ஓசோன் ஓட்டையால் அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும்

ஓசோன் எனப்படும் பாதுகாப்பு வளையம் பூமியை நேரடியாக சூரியக் கதிர்கள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. இந்த படலத்தில் ஓட்டை விழுவது மனிதர்களுக்கு தோல் நோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகிறது.

மேலும் பூமி வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் துருவ பகுதிகளில் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம், தட்பவெப்ப நிலை மாற்றம், நீர் மாசுபாடு என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு ஏற்படும் நீர் மாசுபாடு பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனம் உலக வெப்பமயமாதல் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

உலக வெப்பமயமாதல்(குளோபல் வார்மிங்) மனித குலத்துக்கு பல்வேறு ஆபத்துகள், இழப்புகளை ஏற்படுத்தும் என்பது முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஓசோன் படலத்தில் மேலும் பாதிப்பு ஏற்பட்டு உலக வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும்.

பல்வேறு நச்சுக் கழிவுகள் கடலில் கலக்கும். நீரில் நச்சுத்தன்மை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். நச்சு பாதிப்புள்ள மீன், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் உள்பட பல்வேறு நோய்கள் வரக்கூடும்.
source:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...