சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம் பலவீனமடைந்ததால் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், அடித்தளம் பாதித்துள்ளதால் உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.அருகில் உள்ள புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது ரூ.30 லட்சம் செலவில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், கான்கிரீட் தளம், ஷட்டர் உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவே பொதுமக்கள் இப்பாலத்தில் பயணத்தை தவிர்த்து புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் செல்வராஜ்