Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 02, 2012

எகிப்தின் முதல் அதிபராக முர்ஸி பதியேற்பு!

கெய்ரோ:ஒராண்டு கால மக்கள் போராட்டத்தின் முடிவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபராக முர்ஸி நேற்று சனிக்கிழமை பதவி ஏற்றார். மக்கள் புரட்சியின் மூலம் முபாரக் பதவி இறக்கம் செய்யப்பட்ட பின்பு நடந்த தேர்தலில் முர்ஸி வெற்றிபெற்று அதிபாரக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கான்ஸ்டி டியுஸ்னல் கோர்ட் ஏற்பாடு செய்திருந்த பதவிஏற்பு விழாவில் குடியரசு எகிப்தின் முதல் அதிபார பதவி ஏற்றுக்கொண்டார். முர்ஸி பதவி ஏற்றப்பின் எகிப்தின் மக்கள் முழுமையான சுதந்திர வாழ்க்கையையும் மற்றும் உண்மையான குடியரசையும் வடிவமைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

முபாரக்கின் ஆட்சியில் பிரதமராக இருந்த அஹ்மத் ஷஃபீக்குடன் போட்டியிட்ட முர்ஸி கடந்த ஞாயிறு அன்று அதிபராக அறிவிக்கப்பட்டார். மேலும் முர்ஸி வெற்றிபெற்ற பின் அவர் இஹ்வானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணுவ அரசிடமிருந்து ஆட்சியை பெறுவதற்கு முன் முர்ஸி கெய்ரோ பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து முர்ஸியிடம் ராணுவ ஜெனெரல்கள் முறையாக அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது. நீதிமன்றம் இஹ்வானுல் முஸ்லிமீன் ஆதிக்கம் செலுத்திய
பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட பின்பு நடைபெற்ற போராட்டத்தினைத் தொடர்ந்து முர்ஸி பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
aource:thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...