Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 11, 2012

காட்டுமன்னார்கோவிலில் சில்லரை தட்டுப்பாடு

காட்டுமன்னார்கோவில், : தினமும் கிராமங்களிலிருந்து அதிக அள வில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் வருகின்றனர். பெரும்பாலானோர் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வருகின்றனர். சில்லரை தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் கடைகளின் முன்பு காத்திருக்க வேண் டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது.

 தற்போது பொதுமக்களிடம் ஐநூறு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் உள்ளன. இதனால் பொருட்கள் வாங்குவதற்கு முன் சில்லரைக் காக பல கடைகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நூறு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமா கவே சில்லரை தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர். வேலைக்கு செல்பவர்களுக்கு ஊதியமாக ரூ 200, 500 என வழங்கப்படுவதால் பெரும்பாலா னோர் ரூபாய் நோட்டுகளையே கடைகளுக்கு எடுத்து வருகின்றனர். ரூ 10, 20 50 ஆகிய ரூபாய் நோட்டுகளே முற்றிலும் புழக்கத்தில் இல்லை. இதனால் தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் இயங்கி வரும் வங்கி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லரை வினியோகம்
செய்யப்பட்டது. இருந் தும் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. சில்லரை காசுகள் வைத்து இருக்கும் நபர்களிடமிருந்து 50 பைசா, ரூ 1, 2,5 ஆகிய நாணயங்களை அதிக விலைக்கு வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். ஆகவே இப்பகுதி யில் ஏற்பட்டுள்ள சில் லரை தட்டுப்பாட்டை வங்கி நிர்வாகங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...