Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 11, 2012

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கு ரூ24.71 கோடி ஒதுக்கீடு

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 24 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 263 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை அந்தந்த ஊராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி எடுத்து செய்ய வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாநில நிதிக்குழு மானியமாக வழங்கி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2012 முதல் மே 2012 வரை மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக்கு ரூ.2 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரத்து 764ம், 13 ஒன்றியங்களுக்கும் ரூ.7 கோடியே 52 லட்சத்து 96 ஆயிரத்து 987ம், 683 ஊராட்சிகளுக்கும் ரூ.15 கோடியே 13 லட்சத்து 68 ஆயிரத்து 212 என ஆக மொத்தம் ரூ.24 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 263 ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி பணியாளர்களுக்கு முழுமையாக ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க வேண்டும். நூலக வரித் தொகை நூலக ஆய்வுக்குழுவிற்கு செலுத்தப்பட வேண்டும்.

ஊராட்சி பணியாளர்களுக்கு குழு காப்பீடு திட்ட சந்தா, பங்கு தொகை கட்டப்பட வேண்டும். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி மற்றும் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற பணிகளுக்கு கிராம ஊராட்சிகள் முன்னுரிமை அளித்து செலவினம்
மேற்கொள்ள வேண்டும்.இதுபோல் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் தங்கள் பகுதிகளில் தேவையான குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை எடுத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...