பிரணாப் முகர்ஜி |
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். முதலில் எம்.பி.க்கள் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பிரணாப் முகர்ஜி 527 எம்.பி.க்களின் ஓட்டு கிடைத்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவிற்கு 206 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். இதில் பிரணாப் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 893 மதிப்பு ஓட்டுக்களை பெற்றுள்ளார். சங்மாவுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 116 ஓட்டுக்கள் மதிப்பு பெற்றுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...