Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 23, 2011

ஷேக் அகமது யாசின் - நினைவு கூறுவோம்!

ஷேக் அகமது இஸ்மாயில் யாசின் (Sheikh Ahmed Ismail Hassan Yassin, சூன் 28, 1937 – மார்ச் 22, 2004) ஹமாஸ் எனும் இஸ்லாமிய இராணுவ இயக்கத்தினையும், ஹமாஸ் கட்சியையும் தோற்றுவித்தவர். இவ்வியக்கம் பாலஸ்தீனியத்தில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நூலகங்கள் மற்றும் பிற நல்ல செயல்களை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியக்கமும் ஷேக் அஹ்மத் யாசின் அவர்களும் பாலஸ்தீனியர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அஹ்மத் யாசின், அவர்கள் சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் கைகளும், கால்களும் செயல் இழந்துவிட்டது. பார்வை குறைபாடும் உடையவர். சிறு வயது முதல் சக்கர நாற்காலியினை உபயோகிக்கித்தவர். விடியற் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்த இவரை இஸ்ரேலிய இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இந்த கொடூர தாக்குதலில் இவருடன் இருந்த பன்னிரண்டு நபர்களும் கொல்லப்பட்டனர்.. இவரு மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாட்டு சபையும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்தது. இவருடைய இறுதி சடங்கில் இரண்டு லட்சம் பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர்.

தற்பொழுது இஸ்ரேலிய நாட்டில் உள்ள அஷ்கெலான் நகருக்கு அருகில் உள்ள அல்-ஜுரா எனும் கிராமத்தில்தான் அஹ்மத் யாசின் அவர்கள் பிறந்தார். இவர் பிறக்கும் பொழுது அப்பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவரது தந்தை அப்துல்லாஹ் யாசின் தாயார் சஹதா அல்- ஹபீல் ஆவர். அஹ்மத் யாசினுக்கு மூன்று வயதானபோது தந்தை இறந்துவிட தன்னுடைய நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் சேர்ந்து காசாவிற்கு பயணப்பட்டனர். அந்நேரம் அரேபிய - இஸ்ரேலிய போர் நடந்ததால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் அஹ்மத் யாசின் அவர்களின் குடும்பம் அல்-ஷாட்டி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

ஒரு அகதியாக சொந்த நாட்டிலேயே வந்தடைந்தார் யாசின். அவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்பொழுது தன் நண்பர் அப்துல்லாஹ் அல்-கதிபுடன் மல்யுத்தம் செய்ததில் இவருடைய கழுத்து பகுதியில் அடிபட்டு பல‌ நாட்கள் கட்டு போட்டு இருந்தார். அந்த கட்டினை பிரித்த அன்றைய நாள் முதல் உடல் செயல்பாடு இல்லாமல் வாழ்ந்தார். நண்பனுடன் ஏற்ப்பட்ட சண்டையில் அவருடைய தண்டுவடம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்கவோ ஒரு பொருளை தூக்கவோ முடியாமல் போனது அவருக்கு. ஒரு சமயத்தில் இவருடைய தாய் "எப்படி ஏற்ப்பட்டது?" என்று கதறி கேட்க , 'நண்பனுடைய குடும்பத்திற்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் சண்டை வந்து விடுமோ' என்று எண்ணிய யாசின் பள்ளிகூடத்தில் விளையாடியபோது நடந்தது என்று தாயிடம் நடந்தவற்றை மறைத்தார்.

யாசின், கைரோ, எகிப்தில் உள்ள அல்-அசார் பல்கலை கழகத்தில் சேர்ந்து படிப்பினை தொடர்ந்தார் ஆனால் அவருடைய இயலாமையால் அங்கே அவரால் தொடர்ந்து கல்வி பெற முடியவில்லை. ஆனாலும் வீட்டில் இருந்தபடியே அரசியல், சமூகவியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் இஸ்லாமிய மார்க்க நூல்களையும் கற்றார்.

எகிப்திற்குச் சென்ற ஷேக் அஹமது யாசின் அவர்கள் அங்கே வீரியமாக செயல்பட்டு வந்த இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவ்வியகத்தின் தலைவர் ஆன இமாம் ஹஸனுல் பன்னா அவர்களை சந்தித்துள்ளார். பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காக தன்னுடைய முழு வாழ் நாளையும் அற்பணித்தவர். ஒரு சமயம் பத்திரிக்கையாளர்கள் ஷேக் அஹமது யாசின் அவர்களை சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவர்கள் ஒரு கேள்வியை ஷேக் அஹமது யாசின் அவர்களிடம் கேட்டனர். "மிகப் பெரிய ஆயுத பலமும், பண பலமும், படை பலமும் கொண்ட இஸ்ரேலியர்களிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், வெறும் கற்களை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்ப்பதனால் என்ன பயன்? எப்படியும் நீங்கள் அதிலே தோற்றுவிடுவீர்களே?" என்று கேட்டதற்கு ஷேக் அஹமது யாசின் அவர்கள் "ஒரு காலம் வரும், அப்போது இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு மரங்களும், ஒவ்வொரு பாறைகளும் பேசும், தனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான், அவனை கொள்ளுங்கள் என்று!, அந்த நாள் ஏற்படும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது" என்று கூறினார். இதனை கேட்ட பத்திரிக்கையாளர்கள் வாயடைத்துபோயினர்.

ஷேக் அஹமது யாசின் அவர்கள் எந்த லட்சியத்திற்காக போராடினார்களோ அந்த லட்சியத்தை அடைந்தவர்களாக இறைவனிடம் போய் சேர்ந்தார்கள்.
source

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...