Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 07, 2011

SMS மூலம் உள்ளூர் ரயில் டிக்கெட் அறிமுகம்!

மும்பையில் உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது மொபைல் போனில் பட்டனை தட்டினால் போதும்; ரயில் டிக்கெட் மொபைலுக்கு வந்து விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


மும்பையில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். இவர்கள் இனி, தினமும் வரிசையில் நின்று, டிக்கெட்' எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது எந்த ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதை, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பினால் போதும். டிக்கெட் தொடர்பான தகவல்கள், மொபைல் போனில் உடனடியாக கிடைத்து விடும்.

அதை அவைத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யலாம். இதற்கான கட்டணம், மொபைல் போன், "சிம்'மின், "போஸ்ட் பெய்டு' அல்லது "பிரீ பெய்டு' கட்டணத்தில் கழிக்கப்படும். ஆனாலும் சில சிக்கல்கள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்று, டிக்கெட் புக் செய்ய, சிறப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன், பயணிகளுக்கு தேவைப்படும். இரண்டு, எவ்வாறு கட்டண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படும்.

ஜாவா புரோகிராமில், ஜி.பி.ஆர்.எஸ்., வசதி கொண்ட மொபைல் போன் தான், டிக்கெட் பதிவிற்கு பயன்படும். மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம், டிக்கெட் பதிவுக்கு சர்வீஸ் கட்டணம் விதிக்கும். இந்த கட்டணத்தை ரயில்வே ஏற்பதா, பயணி ஏற்பதா போன்ற குழப்பங்கள் ஏற்படும். "இத்திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, மேற்கு ரயில்வே அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...