Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 30, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம்!!

உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்ற, மெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித் தவையே. இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக் கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும், அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும்.

 நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது.. மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும், அவர்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும், ஏன் இறைவ னின் தூதர்களாகவே இருந்தாலும் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே. இறைவனது கரத்தினால் படைக்கப்பட்ட முதல் மனிதரும்,மிகச்சிறந்த அறிவாளியுமான, மனித சமுதாயத்தின் ஆதிபிதா என்று அழைக்கப்படுகின்ற ஆதம் (அலை) அவர்கள் கூட தவறு செய்தவர்களே. அவர்களின் பிள்ளைக ளாக இருக்கின்ற நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் ஆச்சரியத் திற்கு ஒன்றுமில்லை.

ஆதமின் சந்ததிகள் அனைவர்களும் இரவிலும், பகலிலும் தவறு செய்யக்கூடியவர்களே என இறைவன் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூதர் (ரலி), நூல் : அஹ்மத் (20451)

மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, மனந்திருந்தி வாழ வேண்டும்.

மனிதர்களில் இந்த வகையினர்தான் சிறப்புக்குரியவர்கள். ஆனால் இதற்கு மாற்றமாக அதிக மானோர் என்ன தவறு செய்தாலும், தான் செய்தது சரி என்பதாக தவறை மழுப்ப பார்க்கின்றனர். அதற்காக மணிக்கணக்கில் பேசி, சால்ஜாப்புகள் கூறு கின்றனர். தாம் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலோனரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இறைவன் விரும்பும் உயரிய பண்பு.

தவறை ஒப்புக்குக் கொள்ளுதல்
தன்னிடம் ஏற்பட்ட தவறை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் வாய்த்து விடாது. இருப்பினும் இந்த உயரிய பண்பை தான் இறைவன் மிகவும் விரும்புகின்றான். நம்மைப்படைத்த இறைவனுக்கு மாற்ற மாக ஏராளமான தீய காரியங்களில் ஈடுபடுகின்றோம். அவனது கட்டளைக ளுக்கு மாறு செய்கின்றோம். பாவ காரியங்களில் மூழ்கி,உல்லாசமாய் நீந்திக் கொண்டிருக்கின்றோம். இந்த தருணத்தில் நாம் செய்த பாவகாரியங்களுக்காக இறைவனிடம் மன்றாடி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். இறைவா என்னை மன்னித்து விடு என்ற ஒற்றை வரியில் நாம் மன்னிப்பு கேட்பதை விடவும் இறைவா இத்தனை குற்றங்களை செய்த அற்பன், இந்த அடிமை என்பதாக செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும், தன் முன்னிலை யில் இவ்வாறு தவறுகளை ஒப்புக் கொள்வதை,இறைவன் மிகவும் விரும்பு கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதி மொழி கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு), "ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய் திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும் பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), முஸ்லிம்: 5349

மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை தவறு செய்திருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்குமாறு பணிக்கின்றார்கள். ஒரு அடியான் இறைவனிடம் மன்னிப்பு கேட் டால் அதை தவறாது மன்னிப்பான் என்று கூறாமல், தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டால் அதை தவறாமல் மன்னிப்பான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். இந்த செய்தியிலிருந்து வெறுமனே மன்னிப்பு கேட்பதை விடவும்,செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது இறைவனுக்கு மிகவும் உவப்பான காரியம் என்பதை விளங்க வேண்டும். இறைவன் நமது கோரிக் கைகளை ஏற்றாக வேண்டும் என்பதை விரும்புபவர்கள், செய்த தவறுகள் அனைத்தையும் இறைவன் முன்னிலையில் ஒப்புக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பாவ மன்னிப்பின் தலைசிறந்த துஆ என்று ஒன்றை நமக்கு கற்றுத்தந்து, அந்த துஆ நம்மை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லும் என அதன் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றார்கள். இறை வனுக்கு மிக மிக பிடித்தமான துஆ என்று எதை நமக்கு கற்றுத் தருகின்றார் களோ அதிலும் நாம் செய்த பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு, பின் மன்னிப்பு கேட்கும் வகையில் அதன் வாசக அமைப்பு அமைந்திருக்கின்றது. இந்த துஆ இறைவனுக்கு மிகவும் பிடித்துப்போக, இந்த வாசக அமைப்பும் ஒரு காரணம் என்பதை தெளிவாக அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க,வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும். பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியை யும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற் றின் தீமைகருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெ வரும் இல்லை.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகல் கூறிவிட்டு அதே நால் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகல் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகல் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ர), புகாரி (6306)

source:
நன்றி ஏகத்துவம் இதழ்
அப்துல் கரீம், மேலப்பாளையம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...