Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 14, 2011

கடலூர் மாவட்டத்தி தேர்தல் பணி துவங்கியது

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடக்க உள்ளது. மனுத்தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. ஆனால் தி.மு.க., - அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் யாருக்கு பிரசாரம் செய்வது என புரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

அ.தி.மு.க., வில் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களுக்கு கூட இதுவரை தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து மந்த நிலையிலேயே உள்ளன. கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது. இம்மாவட்டத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர், (நெல்லிக்குப்பம்) பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளை மீண்டும் தி.மு.க., தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

 கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கு நெய்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டு வேல்முருகன் எம்.எல்.ஏ., போட்டியிடுகிறார். அதற்கான பிரசார பணிகளை இப்போதே ஜரூராக துவங்கி விட்டனர். புவனகிரி தொகுதியை பெற காங்., - வி.சி., மற்றும் பா.ம.க., வும் போராடி வந்தன. இதற்கிடையே இது பா.ம.க., வுக்கு மிகவும் சாதகமான தொகுதி என்பதால் வி.சி., கட்சியிடம் புவனகிரி தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு வி.சி., இசைவு தெரிவித்துள்ளதால் புவனகிரி தொகுதியில் பா.ம.க., போட்டியிடுவது ஊர்ஜிதமாகியுள்ளது. வி.சி., கட்சி இம்மாவட்டத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதி என்பதாலும், திருமாவளவன் பிறந்த ஊர் என்பதாலும் திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளது.



 காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் கடலூர் மாவட்டத்தில் தங்களுக்கு சாதகமான 5 தொகுதிகளின் பட்டியலில் ஒன்றான விருத்தாசலம் வி.ஐ.பி., தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எஞ்சியுள்ள சிதம்பரம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குமா, அல்லது தி.மு.க.,வே தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியை கேட்டு வருகிறார். இதற்கிடையே பொன்முடியின் ஆசியோடு சபாபதிமோகன் தொகுதியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சரவணன், செந்தில் விருப்ப மனு கொடுத்து சீட் பெற முயன்று வருகின்றனர். அ.தி.மு.க., வில் ஒருசில தொகுதிகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.

கடலூர் தொகுயில் மாவட்டச் செயலர் எம்.சி., சம்பத்தும், நெய்வேலி தொகுதியில் சொரத்தூர் ராஜேந்திரனும் போட்டியிட வாய்ப்புள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் போட்டியிட உள்ள தொகுதிகள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியை துவங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...