Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 06, 2011

லிபியாவில் தீவிரமடையும் கலவரம்!

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையான நேற்று காலை திரிபோலி மாவட்டத்தில் தஜோரா என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சுமார் 1500 பொதுமக்கள் தலைநகர் திரிபோலியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

எகிப்து கொடிகளையும், அதிபர் கடாபிக்கு எதிரான பேனர்களையும் ஏந்தியபடி வந்தனர். அதிபர் கடாபி ஆட்சியை விட்டு விலகு என்ற கோஷங்களை எழுப்பினர்.

அவர்களது பேரணி போராட்டம் நடைபெறும் சதுக்கத்தை நெருங்கியது. அப்போது, “கடாபி ஒழிக” தஜோரா உங்களுக்கு சவக்குழி தோண்டும் என்று சுவர்களில் எழுதினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தினர்.

இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுரமும் சிதைந்து ஓடினர். இருந்தும் மீண்டும் ஒருங்கிணைந்து போராட்ட சதுக்கத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். மேலும் குண்டுகளையும் வீசினர். மக்கள் மீதும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இருந்தும் திரிபோலியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

எனவே, திரிபோலியை தக்க வைத்துக்கொள்ள கடாபி அரசு படா தபாடு படுகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் ஷாரியா நகரை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. 2-வது நாளாக நேற்றும் அந்த நகரம் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் கடாபியின் மகன் தலைமையில் நடந்தது. இவர்களுடன் சேர்ந்து கூலிப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து போராட்டக்காரர்களும் சண்டையிட்டனர். இதனால் கடும்போர் நடந்தது. இருபுறமும் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டக்காரர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் தரப்பை சேர்ந்த சீனியர் கமாண்டர் கொல்லப்பட்டார். 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இக்காரணங்களால் ஷாவியா நகரில் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் லிபியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான துணிசியாவுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக கூறப் படுகிறது. இதற்கிடையே சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவிக்கும் அதிபர் கடாபிக்கு இண்டர்போல் (சர்வதேச போலீஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்மானவர்கள் 15 பேருக்கு ஆரஞ்சு நோட்டீசு (எச்சரிக்கை நோட்டீசு) வழங்கியுள்ளது. ஆனால், அவர்களை வெளியேற விடாமல் கடாபியின் ராணுவம் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தும் சொத்துக்களை முடக்கியும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...