Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2014

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில மார்க்க அறிஞர்கள் போலீசாரால் விசாரணை-முஸ்லிம்கள் அதிர்ச்சி

விருத்தாசலம், மே.22-தமிழகத்தில் பணிபுரியும்பீகார் மாநில முஸ்லிம் மார்க்கஅறிஞர்கள் போலீசாரால்தீவிரவாதிகளாக விசாரணைசெய்வது தொடர் கதையாகிவருகிறது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூர்செல்லும் சாலையில் உள்ள கணடம்குறிச்சி கிராமத்தில் 25முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். விவசாய கூலிகளான அவர்கள் ஐவேளைதொழுகைக்காக கூரைப் பள்ளிஒன்றை ஏற்படுத்தி அதில் பீகார்மாநிலத்தை சார்ந்த நஜ்முதீன்என்ற ஆலிமை இமாமாகபணியில் அமர்த்தியிருந்தனர்.

21-ம் தேதி சுபுஹுதொழுகை முடித்து விட்டுபள்ளிவாசல் முன்பு நின்றுகொண்டிருந்த இமாம் நஜ்முதீன்ஆலிமை ரோந்து சென்ற வேப்பூர்காவல் நிலைய போலீசார்அவரை விசாரணை செய்தபோது அவருக்கு தமிழ் தெரியாததால் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று விட்டனர். தகவல்அறிந்து கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்செயலாளர் ஏ. சுக்கூர், விருத்தாசலம் வட்டார உலமாகள் சபைசெயலாளர் முஹம்மது உஸ்மான், வேப்பூர் பள்ளிவாசல் இமாம் ஷாகுல் ஹமீது, விருத்தாசலம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் துணைத் தலைவர்ஷேக் பாதுஷா உள்ளிட்டோர்வேப்பூர் காவல் நிலையம் சென்றுசம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகளை சந்தித்தனர்.பள்ளிவாசல் இமாம் என்றும்,ஒரு வருடத்திற்கு மேல் அவர்பணிபுரிவதாகவும் ஜமாஅத்தினர் கூறியும், அதனை ஏற்காமல்ஒரு பயங்கர குற்றவாளியைபோன்று அவரை நடத்தலாமா?என கேள்வி எழுப்பினர். மேலிடஉத்தரவுப்படியே தாங்கள்செய்வதாக காவல் துறையினர்குறிப்பிட்டனர்.உயர் அதிகாரிகளிடம்கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.ஷுக்கூர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக தேவைப்படும்போது ஆஜர்படுத்தப்ப படவேண்டும் என்ற நிபந்தனையோடு இமாம் நஜ்முதீன் ஆலிம் விடுவிக்கப்பட்டார். 

இதேபோன்று, விருத்தாசலம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தீனாக வேலைசெய்து வரும் பீகார் மாநிலத்தைசார்ந்த இம்ரான் என்பவரும்காவல் துறையினரால் அழைத் துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பலத்த முயற்சிக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தமுஸ்லிம்கள் வேலை வாய்ப்புகிடைக்காமல்

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள்-2014

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 61% தேர்ச்சியை கண்டுள்ளது.

அஹ்மத் பாஜில்( S/O அஜீதுல்லாஹ்) 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் 

தஹ்சினா (த/பெ தாஜுத்தீன் )  என்ற மாணவி 454 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் 

தஹ்மினா (த/பெ அப்துல் சமத்) என்ற மாணவி 445 பதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

ஹதிஜா உம்மா (த/பெ ஜாகிர் ஹுசைன் ) என்ற மாணவி 435 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளார்.

செய்தி:முஹம்மது ராஜ்வி (நமது செய்தியாளர்)



மே 22, 2014

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு நாளை (23.05.2014) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திலுள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge1.nic.in ) காணலாம். மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

விடைத்தாள்கள் வழக்கமாக தென்மாவட்டத்தில் உள்ளவை வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.ஆனால் கடந்த ஆண்டு விருத்தாசலம்

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்த அமெரிக்க காவல்துறை!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரிப்பதுதான் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது. விசாரனையின்போது, அவர்கள் நியூயார்க் புறநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் பல, உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் பல ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவை பறிமுதல்

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!
கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம்.

1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள்

மே 21, 2014

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க விண்ணப்பங்கள் விநியோகம்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ நேரடியாக இரண்டாம் வருடம் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு கடைசி நாள் மே 23, இன்னும் 2 நாட்களே உள்ளன. தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது 10 ஆம் வகுப்புக்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு வருடம் படிக்கும் ITI படிப்பு. அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று உரிய கல்லூரியின் முதல்வரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் முகவரி http://tndte.com/2nd_Yr_Dip_Application.pdf அரசு கல்லூரிகளின் பட்டியல் , மற்றும் இதர விவரங்களை கீழே காணலாம். http://www.tndte.com/LE_Add_14-15.pdf 

மே 20, 2014

16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே!

புதுடில்லி,  16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத்துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது. 16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர்களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற் றிருந்தனர்.

 மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை

மே 18, 2014

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: நாளை முதல் பள்ளிகளுக்கு வினியோகம்!

கடலூர் : மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ம் கல்வி ஆண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது.

அதனையொட்டி 2014-15ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வி உபகரணங்களை, பள்ளி திறந்ததும் வழங்கும் வகையில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 9ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள்

மே 17, 2014

16 வது நாடாளும் மன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

16 வது பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்... இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் அதிகார அவையான பாராளுமன்றத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் 20 லிருந்து 30 முஸ்லிம் உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு செல்ல முடிகிறது. 1980 ல் 51 முஸ்லிம்களும், 1984 ல் 48 முஸ்லிம்களும் பாராளுமன்ற அவையில் அங்கம் வகித்தனர்.

இந்த 16 வது தேர்தலில் 23 முஸ்லிம் உறுப்பினர்கள் வென்று பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். 14 சதவீதம் உள்ள முஸ்லிம்களில் வெறும் 4 சதவீதம் பிரதிநிதித்துவம் மட்டுமே பாராளுமன்றத்தில் இடம்பெருகிறது. இது நாட்டின் அவலம் அல்லவா.? 15 வது நாடாளுமன்ற அவையில் 3 முஸ்லிம் பெண்கள் அங்கம் வகித்திருந்தனர் இந்த முறை 2 பெண் முஸ்லிம் உறுப்பினர்களே செல்கின்றனர். இவர்களும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 16 வது பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கும் முஸ்லிம்கள் :

ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்திலிருந்து  – 1
அஸ்ஸாமிலிருந்து – 2
பிகார் – 4
ஜார்க்கண்ட் – 3
கேரளா – 3
தமிழ்நாடு – 1
மேற்கு வங்காளம் – 8
லட்சத்தீவு - 1

அஸ்ஸாம்:
சிராஜ்தீன் அஜ்மல் –AIDUF
பத்ருதீன் அஜ்மல் - AIDUF

ஆந்திர பிரதேசம்:
அசத்துத்தீன் உவைசி

பிகார்:
தஸ்லீமுத்தீன் –RJD
கீர்த்தி ஆசாத் - BJP
தாரிக் அன்வர் – சுயேச்சை
முஹம்மத் அஸ்ராருல் ஹக் – காங்கிரஸ்

கேரளா:
இ. அஹ்மது -முஸ்லிம் லீக்
 E.T.முஹம்மத் பஷீர் - முஸ்லிம் லீக்
M.I.ஷானவாஸ் – காங்கிரஸ்

தமிழ்நாடு:
அன்வர் ராஜா –அதிமுக

மேற்கு வங்காளம்:
முஹம்மது பைசல் –INC
அப்ரின் அலி - திருனாமு காங்கிரஸ்
இத்ரிஸ் அலி - திருனாமு காங்கிரஸ்
சமுத்ரா கான் - திருனாமு காங்கிரஸ்
சுல்தான் அஹ்மத் - திருனாமு காங்கிரஸ்
அபு ஹாசெம் கான் சௌத்ரி – காங்கிரஸ்

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு!

கடலூர், இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதும், கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் குவிவது வழக்கமாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை வேலைவாய்ப்பு அலுவலகம் கொண்டு வந்தது. எனவே இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 21-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதனால் அன்று முதல் 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். இது பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பதால் அவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வது எப்படி? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வசமானது!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வை சார்ந்த சந்திரகாசி அவர்கள் 128,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.விடுதலை சிறுத்தை தலைவர் தோல் திருமாவளவன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்றார்.சிதம்பரம் தொகுதி வாக்கு விபரம்:

அதிமுக- சந்திரகாசி- 429536 

விடுதலை சிறுத்தைகள்- திருமாவளவன்- 301041 

பாமக- சுதா மணிரத்னம்- 279016 

காங்கிரஸ்- வள்ளல் பெருமான்- 28988 

நோட்டா- 12138