Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 01, 2013

வீராணம் ஏரி வறண்டது வாத்து கூடாரமாக மாறிய அவலம்

வீராணம் ஏரி
வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். ஏரியின் மொத்த கொள்ள லவு 47.50 அடியாகும். ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியும் நடைபெற்று வரும். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் ஏரி முழு கொள்ளலவை எட்டவில்லை.

மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியும் விரைவாக நிறுத்தப்பட்டது. ஏரி மிக வேகமாக இந்த ஆண்டு வறண் டது. ஏரி வறண்டதால் இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையா டும் மைதானமாக ஏரியை பயன்படுத்துகின்றனர். கந்தகுமாரன் அருகே ஏரியில் சிறு சிறு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை வெளி மாவட்டங்களிலிருந்து வாத்து மேய்ப்பதற்கு வந்தவர்கள் வாத்துக்களை கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீரில் மேய்த்து வருகின்றனர். ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களுக்கு அருகே வாத்து மேய்ப்பவர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். ஏரி வறண்டதால் வாத்து மேய்ப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளது என கூறப்படுகிறது. இதுவரை இதுபோன்று ஏரி வறண்டதில்லை என
கூறப்படுகிறது.வரும் ஆண்டிலாவது தண்ணீர் தேக்கப்பட்டு பாசனத்திற்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...