Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 22, 2013

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நுழைவு சீட்டு வழங்கல்!

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் இன்றும் நாளையும் விநியோகிக்கப்பட உள்ளன. அதற்கான மையங்கள் பற்றிய விவரங்களை அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்றும் (21ம்தேதி) யும் (22ம்தேதி) நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. காரைக்கால் கல்வி மாவட்டத்திற்கான நுழைவு சீட்டுகள் காரைக்கால் அன்னை தெரசா மேல் நிலைப்பள்ளியிலும்,

புதுச்சேரி கல்வி மாவட்டத்திற்கான நுழைவு சீட்டுகள் புதுச்சேரி தமிழ்தென்றல் திரு.வி.க உயர் நிலைப்பள்ளியிலும்,

திண்டிவனம் கல்வி மாவட்டத்திற் கான நுழைவு சீட்டுகள் திண்டிவனம் தேசிய மேல்நிலைப்பள்ளியிலும் விநியோகிக்கப்படும்.

விழுப்புரத்திற்கான நுழைவு சீட்டுகள் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலும், கள்ளக்குறிச்சிக்கு அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

விருத்தாசலத்திற்கு அப்பகுதி இன்ஃபன்ட் மெட்ரிக் பள்ளியிலும்

காட்டுமன்னார்கோவிலுக்கு உடையார்குடி ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலும் நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடலூருக்கும்,

சிதம்பரம் எஸ்.ஆர்.கே.வி பள்ளியில் சிதம்பரத்திற்கும் நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தங்களது இருப்பிட முகவரிக்கு அருகாமையில் உள்ள விநியோக மையத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவு சீட்டு இல்லாத தேர்வர்கள்
தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படாது. தேர்வு கட்டணம் மற்றும் தகுதிக்கான சான்றுகளை இதுவரை அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்காத தேர்வர்கள் அவற்றை தேர்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கும் மையத்தில் நேரில் சமர்ப்பித்த பிறகே உரிய தேர்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கப்படும்.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...