Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2013

அரசியலில் குதிக்கத் தயாராகும் தாலிபன்கள்!

தோஹா: அரசியலில் பிரவேசிக்கும் முடிவின் முதல் கட்டமாக, கத்தார் நாட்டில் அரசியல் அலுவலகம் தொடங்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளார்களாம். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்து, அங்கு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைத்தது. தற்போது, ஹமீத் கர்சாய் அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

பாதுகாப்பு பணியில் இருக்கும்அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த இரு வருடங்களில் முழுமையாக வெளியேற இருக்கிறது. சமீபத்தில், தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்று அதிபர் கர்சாய் கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக அரபு நாடான கத்தார் நாட்டின் மன்னரை சந்தித்த கர்சாய், அங்கு தலிபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். கர்சாயின் இத்தகைய செயல்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்த தாலிபான்கள், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளனராம். கத்தாரில் உள்ள தோஹாவில் தலிபான்கள் அரசியல் அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள்
மும்முரமாக நடந்து வருகிறதாம். தலிபான்களின் இந்த மன மாற்றம், அவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப் படுகிறது.

-thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...