Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2012

டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை

கடலூர்:டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க கடலூர் மாவட்ட கலெக்டர் தொலைபேசி மூலம் நூதன பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நூதன பிரசாரம் கடலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழித்து முன்மாதிரி மாவட்டமாக மாற்ற கலெக்டர் ராஜேந்திரரத்னூ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் முன்னோடி திட்டமாக ஒரே நாளில், ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொலைபேசிகளில் ரிசீவரை எடுத்தவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சு ஒலிப்பரப்பாகி வருகிறது. அது பற்றி விவரம் வருமாறு:– டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வணக்கம், நான் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ பேசுகிறேன். டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்க வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில், சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும். தேவையற்ற பொருட்களில் நீர் தேங்கியிருக்காமல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு £லைபேசியில் கலெக்டரின் பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது.

 டெங்கு காய்ச்சலை ஒழிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ எடுத்து வரும் இந்த நூதன பிரசாரம் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஒலி பரப்பு டெங்கு காய்ச்சல் நோய்
முற்றிலும் தீர்க்கப்படும் வரை ஒலிப்பரப்ப இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 கருத்துகள்:

Tamil Magazine சொன்னது…

நல்ல பல தகவல்கள் டெங்கு பற்றி.

மிக்க நன்றி.

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...