Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2012

முக்கிய அறிவிப்பு: கேஸ் சிலிண்டர் மானியம்!

நவ 5: தற்போது மத்திய அரசின் புதிய உத்தரவின் பெயரில் ஒரு கேஸ் சிலிண்டர் இனைப்புக்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே (தற்போது 9 ஆக உயர்த்த பரீசிலனையில் உள்ளது) 6 சிலிண்டர்களுக்கு மேல் உபயோகம் செய்தால் மத்திய அரசின் மானியம் இல்லாமல் வாங்கி கொள்ளலாம். இந்த மானியத்திற்கு விண்ணபம் செய்வதற்கு அரசின் 3 அடையாள அட்டைகளை ஒவ்வொன்றையும் ஜந்து காப்பி எடுத்து ( 3 PROOF) கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது தேவையில்லை என்று கேஸ் ஏஜென்சி அறிவிப்பு செய்துள்ளது . இது சரியான முறையில் மக்களை சென்று அடையாதலால் ஜெராக்கஸ் எடுக்கும் கடையில் காப்பி எடுக்க கூட்டம் அழைமோதுவதாக தெரிகின்றது. இதை செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்

 மேலும்... சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள், அதை தக்கவைத்துக் கொள்ளவும் அரசு மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பெறுவதற்கும் KYC (Know Your Customer/consumer/client) எனப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து அந்தந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் உரிய சான்றுகளுடன் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. போலி பெயர்களிலும், ஒருவரே பல சமையல் எரிவாயு இணைப்புகள் பெறுவதையும் தடுக்கும் வகையில், கே.ஒய்.சி. எனப்படும் இந்த அடையாள மற்றும் முகவரி உறுதிப்படுத்தல் நடவடிக்கையை மத்திய அரசு கட்டாயமாக்கியிருந்தது (mandatory). இதனால் பரங்கிப்பேட்டையில் கடந்த இருவாரத்திற்கும் மேலாக அன்னலட்சுமி கேஸ் ஏஜென்ஸி மற்றும் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. எதிர்வரும் நவம்பர் 15-ந்தேதி
வரை நீட்டிக்கப்பட்ட இந்த காலக்கெடு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் நுகர்வோர் தங்களுடைய கே.ஒய்.சி. படிவத்தை தங்கள் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் தரலாம் என்றும் அது கட்டாயமில்லை (optional) என்றும் மேலும் வங்கி கணக்கு இல்லாத நுகர்வோர் கே.ஒய்.சி. படிவம் அளிக்கும்போது வங்கிக் கணக்கு விபரத்தை அளிக்கத் தேவையில்லை, அதாவது இதற்காக புதிய வங்கி கணக்கு துவக்க தேவையில்லை என்று அன்னலட்சுமி கேஸ் ஏஜென்ஸி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source:mypno

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...