Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 08, 2011

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது?

தெலங்கானா பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஆந்திர மாநில அரசு திணறி வரும் நிலையில்,அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா தனி மாநிலம் கோரி அண்மையில் மீண்டும் வெடித்த போராட்டம் நேற்றுடன் 25 ஆவது நாளை எட்டியுள்ளது.

தெலங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.சட்டம் ஒழுங்கு நிலைமையும் மோசமடைந்துள்ளது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு நாடுமுழுவதும் மின் விநியோகம் பாதிக்கபட்டு உள்ளது.

இதனையடுத்து, ஆந்திர ஆளுனர் நரசிம்மன் நேற்று டெல்லி வந்தார்.அவர் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும், அதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது தெலங்கானா போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள
நிலைமைகளை அவர்களிடம் ஆளுனர் நரசிம்மன விளக்கினார்.

போராட்டத்தை மாநில அரசால் சமாளிக்க இயலவில்லை என்பதால்,மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்ததாகவும், அதனை சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...