Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 30, 2011

போலியோவை முற்றாக ஒழிக்க உறுதிப்பாடு !

இளம்பிள்ளை வாதத்தை (போலியோவை) அடியோடு ஒழிப்பதற்கான உறுதியை பேர்த் நகரில் கூடிய பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் பூண்டிருக்கிறார்கள்.இந்த நோய்க்கெதிரான போராட்டத்துக்காக 5 கோடி டாலர்களை வழங்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.

உலகிலேயே இன்னும் 4 நாடுகளில் மாத்திரந்தான் இந்த போலியோ நோய் தற்போது தாக்கிவருகின்றது.இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மாத்திரந்தான் போலியோ நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் கால்கள் வாதத்தினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்துபோகும்.

உலகில் 99 வீதம் இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இந்த நோயை முற்றாக அழிப்பது என்று உறுதி பூண்டிருக்கிறார்கள்.இதற்காக தமது 5 கோடி டாலர்களை வழங்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் உறுதியளித்தார்.
இந்த போலியோ இன்னமும் தாக்குகின்ற நாடுகளில்கூட அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், அந்த நோய் மிகவும் பலமாக தொற்றக்கூடியது. இலகுவில் அது மீண்டும் தொற்றத்தொடங்கிவிடும்.ஆகவே அந்த நோயை அடுத்து வருகின்ற 2 வருடங்களுக்குள் முற்றாக அழிப்பது என்பது உலகின் கரங்களிலேயே இருக்கிறது என்று
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் கூறுகிறார்.

நடக்க முடியாமல் முடங்கியிருக்கக்கூடிய 80 லட்சம் பேர் போலியோ நோய்த்தடுப்பு மருந்து காரணமாக இன்று உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலியோவை ஒழிப்பதற்கான உலக முயற்சி என்பது 1988 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இந்த புதிய மீள் முயற்சி என்பது ஐநா போன்ற நிறுவனங்களுடன் இணைந்துதான் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.
சரியாகச் செயற்பட்டால் 2013 இல் உலகில் போலியோவை முற்றாக ஒழித்துவிடலாம் என்று அவை நம்புகின்ற

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...