Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 07, 2011

ஜெயலலிதா மாறவில்லை!!!

மகத்தான அதிபதியாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம்.மனிதர்களில் அதிகமானோர் (நம்மை மறுப்போராகவே) உள்ளனர். (அல்குர்ஆன் 25: 50)

நபி(ஸல்)அவர்கள், முஆத் அவர்களையும், என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும், பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத்துரையுங்கள். சிரமமானதை எடுத்துரைக்காதீர்கள். மக்களுக்கு நற் செய்தி கூறுங்கள். வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்புசெலுத்தி)க் கொள்ளுங்கள். (கருத்துவேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள் என்று (அறிவுரை) கூறினார்கள். (அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) புகாரி 3038)

கடந்த தேர்தலின்போது தன்னிடம் அளப்பரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஊடகங்களும் அவர் மிகவும் மாறி விட்டார் என்று பிரச்சாரம் செய்தன. மக்களும் அவர் மாறிவிட்டதாக நினைத்து மிருக பலத்துடன் அவரை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்யும் அளவுக்கு அவருக்கு ஆதரவும் அளித்தனர். ஆனால், அவரிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாற்றம் ஏற்பட்டதாக ஒப்புக் கொண்டாலும் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் அவருக்குப் பிடிக்காது என்ற நிலைபாட்டில் அவரிடம் நிச்சயம் கடுகளவும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை அவரே நிருபித்து வருகிறார்...

இரண்டாயிரம் முஸ்லிம்களைக் கொன்று கருவருத்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து கண்ணியப்படுத்தியதன் மூலம் தான் முஸ்லிம் விரோதிகளின் தோழி தான் என்பதை மீண்டும் பகிரங்கமாகக் காட்டிக் கொண்டார். இதில் தன்னிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

முஸ்லிம்களைத் திட்டமிட்டு கொன்று குவிக்கும் சங்பரிவார ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
கடிவாளம் போடும் வகையில் மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதைத் தடுக்கும் வகையில் தனது கடும் கண்டனத்தை ஜெயலலிதா பதிவு செய்து தான் பாசிஸ்டுகளின் பக்கமே என்பதை நிருபித்தார்.

கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க சட்டம் இல்லை. மேலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டாலும் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டாலும் ஊனமாக்கப்பட்டாலும் அவர்கள் மீது வழக்குகள் தான் போடப்படுகிறதே தவிர எந்த இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. மதக்கலவரத் தடுப்பு சட்டத்தில் இதற்கு போதுமான இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதைதான் ஜெயலலிதா எதிர்க்கிறார். அது போல் கலவரத்தைத் தடுக்கத் தவறும் அதிகாரிகளைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை. இந்த தைரியத்தில் தான் சங்பரிவார அதிகாரிகள் மதவெறியுடன் நடக்கின்றனர். மதக்கலவரத் தடுப்பு சட்டத்தில் இதற்கும் வழிவகை காணப்பட்டுள்ளது. இதை ஜெயலலிதா எதிர்ப்பதன் மூலம் அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்க துணை போகிறார்.

தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு ஜெயலலிதா கூற வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை ஏற்காத அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அதைச் சொல்வதாகச் சொன்னார்.

அதன்படி தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார். இதை ஜெயா டிவியில் அடிக்கடி தலைப்புச் செய்தியாகவும் வாசிக்க வைத்தார். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் நடந்த முதல் சட்டசபைக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் கூறவில்லை. அது பற்றி இன்றுவரை வாய் திறக்கவே இல்லை.

நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு திமுக ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்டது. பள்ளிவாசல் லட்டர் பேடில் எழுதி கோரிக்கை வைத்தாலே அந்த அரிசி கிடைத்து வந்தது. ஜெயலலிதா ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசித் திட்டம் இலவச அரசித் திட்டமாக மாற்றப்பட்டதால் நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ஐந்து சதவிகித பள்ளிவாசல்களுக்குக் கூட இலவச அரிசி வழங்கப்படவில்லை.

வக்பு வாரியத்திலிருந்து கடிதம் வாங்கி வர வேண்டும் எனக்கூறி அதிகாரிகள் ஜமாஅத் நிர்வாகிகளை விரட்டியடித்தனர். வருமானம் உள்ள பள்ளிவாசல்கள் தான் வக்புவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானம் இல்லாத 95 சதவிகிதம் பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. கிராமங்களில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு வக்பு வாரியம் என்றால் என்ன என்றே தெரியாது. இதெல்லாம் தெரிந்திருந்தும் வக்பு வாரியத்தில் கடிதம் வாங்கி வந்தால் தான் இலவச அரிசி என்று உத்தரவிட்டார். ஆனால் கோவில்களில் அன்னதானம் மட்டும் தங்கு தடை இல்லாமல் நடத்தப்படுகிறது.

முஸ்லிம்கள் சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ போதுமான அளவில் தேர்வு செய்யப்படுவதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கிராமங்களில் கிடைக்கும் உள்ளாட்சி பதவிகள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வந்த ஒரே அரசியல் அதிகாரமாக இருந்தது. அதிலும் ஜெயலலிதா மண் அள்ளிப் போட்டுள்ளார். வார்டுகளைச் சீரமைக்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வார்டுகளையும் கிராமங்களையும் தலித் மக்களுக்கான வார்டாக ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவரான தமிழக தேர்தல் அதிகாரி அய்யர் என்பவர் மாற்றி விட்டார்.

முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் முஸ்லிம்கள் பொறுப்புக்கு வரும் வாய்ப்பைத் தடுத்து விட்டால் அவர்கள் இந்துக்கள் பகுதியில் தேர்வு செய்யப்பட முடியுமா? கோவை, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் துடைத்து எறியப்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் முஸ்லிம் ஜமாஅத்தார்கள் நடத்திய போராட்டங்களால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

பத்து மாநகராட்சி மேயர்களுக்கான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில் ஒரே ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பு அளிக்க அவருக்கு மனமில்லை.

தனது கட்சியின் சார்பில் மூன்று பேருக்கு மட்டுமே அவர் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளித்தார். இதுவே முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று முஸ்லிம்களுக்கு மனக்குறை உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர் இறந்ததால் நடக்கும் திருச்சி இடைத் தேர்தலிலும் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

நகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலிலும் மூவர் மட்டுமே(?) முஸ்லிம்கள்.இப்படி எல்லா வகையிலும் முஸ்லிம்களை ஜெயலலிதா புறக்கணிக்கிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக கொலைகார மோடி சாது வேடம் போடுகிறான். அவனுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு தனது கட்சியின் சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி முஸ்லிம்களில் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளார்.

மற்ற விஷயங்களில் அவர் மாறினாரா இல்லையா என்பதில் நமக்கு அக்கறை இல்லை.முஸ்லிம்களை அவர் நஞ்சென வெறுக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.அதுபோல் தலித் மக்களை சர்வசாதரணமாக சுட்டுத் தள்ளி கடமை தவறிய காவலர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தும் வெறும் ஒரு லட்ச ரூபாய் நட்ட ஈடு என்று அவர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் தலித் மக்களின் உயிர் அவ்வளவு மலிவாக ஆகி விட்டது. அரசாங்கத்தின் தவறு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூட நியாயாம் வழங்க ஜெயலலிதா விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.இப்படியே போனால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கு ஏற்பட்ட கதிதான் எற்படும் என்று எச்சரிக்கிறோம்.

கலவரத் தடுப்பு மசோதாவே சிறந்த நிவாரணம்

உலகில் எல்லா நாடுகளையும் விட இந்தியாதான் ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளில் சிறந்த நாடாக கருதப்படுகின்றது. காரணம் இந்தியாவில்தான் எல்லா மதத்தவருக்கும் சம உரிமைகள் வழங்கப்படுகின்றன. தங்களுடைய மத சடங்குகளை மறைவின்றி நிறை வேற்றிடவும், தங்களது மதத்தை பிரச்சாரம் செய்வதற்கும் இங்கே முழு உரிமைகள் உண்டு.

ஆனால் இந்திய அரசியல் சாசனம் தான் இப்படிச் சொல்கிறதே தவிர இங்கிருக்கும் சில மதவாத பயங்கரவாத சக்திகள் இதை எதிர்க்கவே செய்கின்றன. இவர்களின் முழு நோக்கமும் இந்தியாவில் இருக்கும் மாற்று மதத்தவரை வேரோடு அழித்து விட வேண்டும் என்பதுதான்.

இந்தியாவில் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட கலவரங்கள் அதிகபட்சம் முஸ்லிம்களைக் குறி வைத்துத்தான் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. கொல்கொத்தாவின் நவகாளி கலவரம் துவங்கி கடைசியாக குஜராத் கலவரம் வரை அனைத்துமே ஆற அமர திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டவை ஆகும்.

இந்திய தேசத்தின் தந்தை காந்தியை ஒருபக்கம் அவர்களே சுட்டுக் கொன்று விட்டு மறுபக்கம் இஸ்லாமியர்கள் மீது பயங்கர கலவரத்தை நிகழ்த்தி நூற்று கணக்கில் முஸ்லிம்களை கருவறுத்தனர், இந்த சங்பரிவாரத்தினர்.

அதைப்போலவே 2002 ஆம் அண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கோத்ராவில் கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் எரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடுமையான கலவரம் நிகழ்த்தப்பட்டது. இந்த கலவரங்கள் முடிந்த பின்பு பல சமூக ஆர்வலர்கள் குஜராத்திற்குச் சென்று நேரடிக் களத்தொகுப்பில் ஈடுபட்டு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு அதைப் புத்தகமாக வெளியிட்டனர்.

கலவரம் நிகழ்ந்து பல வருடங்களுக்குப் பின்பு தெகல்காவினர் ஆராயும் போது தான் பல உண்மைகள் வெளியாகின்றன. முன்கூட்டியே பெட்ரோல் வாங்கப் பட்டதும், கலவரத்துக்காக முன்கூட்டியே வாள்கள், கத்திகள் பட்டை தீட்டப்பட்ட நிகழ்வுகளும் வெளியாயின.

குஜராத்தை ஒரு பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தி மாபெரும் வெற்றி கண்ட வெறிமிருகம் மோடியின் செயல் சங்பரிவார சக்திகளிடம் பாராட்டுகளைக் குவித்தது.

இந்த நிகழ்விற்குப் பிறகு இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களும் கிருத்தவ மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலை உண்டானது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் கலவரத் தடுப்பு மசோதா என்னும் ஒரு சிறப்பான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அதை மாநிலங்களில் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த கலவரத் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் பாதுகாப்புப் பெறலாம் என்பது நோக்கமாக இருந்தபோது சங்பரிவார கூட்டணி சக்திகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் 9 மாநிலங்களில் இந்த மசோதா கடுமையாக எதிர்க்கப்படுகின்றது.

சங்பரிவார கூட்டணியல்லாத(?) ஜெயலலிதா ஆளும் தமிழ் நாட்டிலும் இந்த மசோதா எதிர்க்கப்படுகின்றது.

சங்பரிவார சக்திகள் ஒட்டுமொத்தமாக இதை எதிர்க்கும் அளவிற்கு இந்த மசோதாவில் அப்படி என்னதான் இருக்கின்றது? என்பதை நாம் உற்று நோக்கினால் இவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மை நமக்குத் தெரிய வரும்.கலவரத் தடுப்பு மசோதாவில் கீழ்க்கண்ட ஷரத்துக்கள் இடம் பெற்று இருக்கின்றன.

சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையே ஏற்படும் கலவரங்கள், மதக்கலவரங்கள் உள்பட எந்தவித கலவரங்கள் ஏற்பட்டாலும் அதை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதில் 4 பேர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவராகவும் மற்றவர்கள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

கலவரத்தை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கட்டுப்படுத்தாமல் அரசு அதிகாரிகள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழி செய்கிறது.

கலவரத்தில் உயிர் இழக்கும் நபரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் நிவாரண உதவி அளிக்கவும், கலவரத்தில் கற்பழிக்கப்பட்டால் அந்த பெண்ணுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வழங்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.

கலவரத்தில் கொல்லப்பட்டால் அவர்களுக்கு 15 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பதை குஜராத் நரமோடி போன்றவர்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

இதுபோன்ற சங்பரிவார சக்திகள் எதிர்த்தாலும் இதை உடனடியாக நிறைவேற்றி இஸ்லாமியர்களைப் பாதுகாப்பது ஆளும் அரசின் கடமை.

நன்றி: உணர்வு இதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...