ஐநா: இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.இதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.உலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.உலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...