டெல்அவீவ்:ஜெருசலத்தில் குடியேற்ற நிர்மாணப் பணிகள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
யூதர்களின் சிறப்புத் தினமான பஸோவர் தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது இதனை தெரிவித்தார்.
ஜெருசலத்தின் வடக்கு மற்றும் தெற்கில் குடியேற்ற நிர்மாணங்கள் தொடரும் எனவும் இதற்கு மாற்றமான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீனுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்காக குடியேற்ற நிர்மாணப் பணிகளை நிறுத்தவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தப் பிறகும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெதன்யாகுவின் உரை அமைந்துள்ளது.
குடியேற்ற நிர்மாணப் பணிகளை நிறுத்தாமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் அதாரிட்டி அறிவித்துள்ளது. இதற்கிடையே ஃபலஸ்தீன் நாடு பிரகடனப்படுத்துவதான ஃபலஸ்தீன் அமைப்புகளின் அறிக்கைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கை எதிர்காலத்தின் பலனை அனுபவிப்பதற்கான அழைப்பு என்றும் இதனை கடுமையாக சந்திப்போம் எனவும் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மேன் மிரட்டல் விடுத்துள்ளார்.
நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...