Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2010

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ரஃபா: நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.
காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.
சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.
இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.
அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.
இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.
இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...