Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 03, 2010

தீ விபத்து சம்மந்தமான பத்திரிக்கை செய்திகள்

தினமணி செய்தி
8 கடைகளில் தீ:​ ரூ.1 லட்சம் ​ சேதம்

சிதம்பரம்,ஏப்.​ 2:​ காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளுமேடு கடைத் தெருவில் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கீற்றுக் கொட்டகையில் அமைக்கப்பட்டிருந்த 8 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
÷ஜக்கரியா என்பவரது ஆட்டுக்கறிக்கடை,​​ முகமதுயூனுஸ் காய்கறிக்கடை,​​ ஜமீல் பெட்டிக்கடை,​​ விறகுக்கடை,​​ டீக்கடை உள்ளிட்ட 8 கடைகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.​ இவ்விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.​ தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.​ இதுகுறித்து புத்தூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் செய்தி:-

காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்து: 9 கடைகள் எரிந்து சேதம்
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கடைகள் எரிந்து சேதமடைந்தன.காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கடைத்தெருவில் உள்ள ஷபீக்கூர் ரகுமான் டீக் கடை நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து அருகில் இருந்த அப்துல்லா, ரகமதுல்லா, அன்வர்தீன், உபைது, பக்கீர் முகமது, முகமது யூனுஸ், அப்துல் கத்தார், ஜக்காரியா ஆகியோரது கடைகள் எரிந்தன. தகவல் அறிந்த காட்டுமன் னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ் ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர் கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...