ஜூலை 29, 2020
ஜனவரி 18, 2019
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -12
கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தங்களின் எல்லைகள் பிரித்து செயல்பட தொடங்கின.கொள்ளுமேடு ஊராட்சி மன்றம் எல்லையை பிரித்து தன் செயல்பாட்டை தனித்துவமாக மிகச் சிறப்பாக செயல்பட அன்றைய பெரியவர்கள் பலர் காரணமாக இருந்தார்கள். நம் ஊரைப் பொருத்த வரை கிராம பஞ்சாயத்தும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்தே செயல்படும்!
1996 ஆம் ஆண்டு வரை நம் ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களால் ஏகோபித்த முடிவில் விடப்பட்டு தலைவர் மற்றும் துனை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பது வழக்கமாக இருந்தது! தமிழகம் முழுக்க ஊராட்சி மன்ற தேர்தல்கள் களைக்கட்டும் இங்கோ ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட மக்கள் ஒரு மணி நேரத்தில் அன்னப்போஸ்டாக அதிகாரத்தை அள்ளித்தருவார்கள்!அல்லாஹ் இந்த அழகிய கிராமத்தை
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -11
கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள்!
1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.
1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.
2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள்! அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்."ஹம்தே ஹுதாயே அக்பர்" என்ற உருது பாடலும் "மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா" என்ற பார்சி பாடலும்
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -10
1960 ஆம் ஆண்டு கொள்ளுமேட்டில் தபால் நிலையம் (Post office) கொண்டுவரப்பட்டது.ஆயங்குடி ஆசிரியர் மர்ஹும் இப்ராஹிம் மற்றும் எனது பெரிய பாவா மர்ஹும் N முஹம்மது அலி ஆகியோரின் பெரும் முயற்சியால் அது சாத்தியமானது.அன்றைய Post master ராக மர்ஹும் இப்ராஹிம் அவர்களே இருந்தார்கள்.பிறகு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று விடைப்பெற்றார்.
பின்னர் மர்ஹும் K ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் போஸ்ட் மாஸ்டர் பணியில் தன் ஓய்வு காலம் வரை ஓய்வின்றி உழைத்தார்.அவருடன் மர்ஹும் S முஹம்மது கௌஸ் அவர்களும் இணைந்து 20 வருடங்கள் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்றார்.பின்னர் K அப்துல்லாஹ் அவர்கள் Post man ஆக 25 வருட அனுபவம் பெற்று பதவி உயர்வு அடைந்து சிதம்பரம் தலைமை தபால் நிலையத்திர்க்கு மாற்றலாகி ஓய்வுப்பெற்றார். தற்போது R ஜெக்கரியா அவர்கள் நம் ஊரின் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாழ்த்துக்கள்....
விவசாயமும் வளைக்குடா வேலைகளுமே நம் மூலதனம் என எண்ணியதால் என்னவோ நமதூரில் 1995 ஆம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகள்
ஜனவரி 17, 2019
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீராணம் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களை இணைக்கும் நோக்கில் நீர்வழித்தடம் அமைத்து படகு போக்குவரத்தும் துவங்கியது!
கிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.
கிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.
காலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓடம் இயக்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியாக ஒய்யாரமாக ஓடம் ஏரி பயணித்தார்கள்,இதன் பயனாக மேற்கில் விளைந்த பொருட்கள் கிழக்கு கரைக்கு வர, பல பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தது நிலக்கடலை, சோழம்,மாங்காய்,மாம்பழம் முந்திரிப்பழம்,எலந்தை பழம், கொடிநாவல் பழம்,வெள்ளேரி பிஞ்சு, தர்பூசணி,கம்பு கேள்வரகு, மூங்கில் படல் என அனைத்து பொருட்களும் ஓடம் ஏரி வந்து தலை சுமையாக கிராமங்களை வந்து சேறும்!!
கொள்ளுமேடு இராயநல்லூர் நத்தலை மானியம்ஆடூர்
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -8
வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா?
ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்கிட்டு கூறுவதில்லை,அந்நிகழ்வு 1927 ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு குறிப்பு உண்டு. அக்குறிப்பானது நமதூர் இரட்டை மதகு சட்டர்க்கு மேற்பரப்பில் சிமென்ட்டால் எழுதப்பட்டிருக்கும்.
கொள்ளுமேட்டில் "ஒடப்பான்கரை" என்னும் பெயரில் சிரிய நிலப்பரப்பு இன்றும் அறியப்படுகிறது,அப்பகுதி 1977 ஆம் ஆண்டு வரை பள்ளப்பகுதியாகவே காணப்பட்டது அந்த நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயம் செய்வதில் திறமையானவர்கள் அந்த நிலத்தில் மட்டும் எல்லா காலத்திலும் தண்ணீர் 1 அடிக்குமேல் குளம்போல கட்டிகிடக்கும் குதிரைவால்,பொண்ணி ரக நெல் பயிரிடுவது வழக்கம்.மற்ற காலங்களில் கோரை முளைந்துகிடக்கும்.
அந்த நிலப்பகுதி முழுக்க விரால் மீன்கள் நிறைந்து
டிசம்பர் 07, 2018
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -7
நம்ம ஊரு கல்யாணம்!
1985ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த திருமணங்கள்-ஊர் உறவுகள் பெரியவர்கள் நண்பர்கள் ஆண் பெண் குழந்தைகள் என எல்லோரும் ஒன்று கூடி குதூகலத்துடன் கொண்டாடிய காலம் சடங்கு சம்பிரதாயம் ஊர் வழக்கம் என ஒருவாரத்திற்கு ஓசி சாப்பாடு களைக்கட்டும்.
மாப்பிள்ளை தோழனாக வரும் நண்பர்கள் ஒரு மாதத்திற்கு விலகாமல் உடன் நிற்க, உறவுக்காரர்கள் 15 நாட்கள் வரை கல்யாண வீடே கதி என கிடக்க, 40 நாள்சீறும் நடையாய் நடக்கும்.புது மாப்பிள்ளையோ புனைப் பெயரில் அறியப்பட பெண் வீட்டார் மருமகனுக்கு பேட்டரிலைட், குடை, சைக்கிள் செருப்பு, மைனர்சங்கிலி, மோதிரம், வாட்ச் என வாங்கிதருவது வழக்கம்.செலவுகளை சிறமத்துடன் ஏற்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்ப்பார்ப்பை போக்கும்வகையில் சீதனங்களையும் சீர்வரிசைகளையும் சிக்கனம் இன்றி
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -6
கொள்ளுமேட்டின் வளர்ச்சியில் சங்கங்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது
அல்ஹம்துலில்லாஹ்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
1973 ஆம் ஆண்டில் அன்றைய அரேபிய தேசங்களில் வேலை வாய்ப்புகளின் வாசல்கள் உலக மக்களுக்காக திறக்கப்பட்டாலும் நம் ஊரின் வாசல் மட்டும் அடைப்பட்டே கிடந்தது! காரணம் 1971 முதல் 1977 வரையான 7 வருட காலங்கள் நம் ஊர் இரண்டு ஐமாத்தாக பிரிந்து அடிதடி என கோர்ட்டு வாசல்வரை சென்றது.
பின்னர் 1977 ஆம் ஆண்டில் ஊர் ஒற்றுமையை நோக்கி மெல்ல பயணித்தது, 1978 ஆம் ஆண்டுகளில் இரு ஜமாஅத்களும் ஒற்றுமையுடன் செயல்படத்தொடங்கினஅல்ஹம்துலில்லாஹ்...
இக்காலகட்டத்தில் வெளி உலகை பற்றி சிந்தித்த நம் இளைஞர்கள் தங்கள் பொருளதாரத்தை வளப்படுத்திக்கொள்ள வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி "வெளிநாட்டு வாழ்வை வாழ்க்கையாக"மாற்ற சவுதி, துபாய் கத்தார், குவைத்,பஹ்ரைன் மஸ்கட், லிபியா போன்ற அயல் தேசங்களுக்கு பறக்கத் தொடங்கினர்.
1985 ஆம் ஆண்டில் அன்றைய நிலவரத்தில் நமதூர் இளைஞர்கள் 15 பேர் மட்டுமே அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்தனர்,இருப்பினும் நலவை நாடும் நற்பனி மன்றம் துவங்கி மாத சந்தா 10 திர்கம் சேகரித்து சமூகத்தில் ஏழ்மைநிலை மக்களுக்கு உதவ தொடங்கப்பட்டது.மக்களின் கோரிக்கைகளுக்கு ஏறப்ப உதவிகள் செய்துவந்தனர்.
சில வருடங்கள் கடந்த பின்னர் 100 க்கு மேற்பட்ட இளைஞர்கள் UAE முழுக்க வருகைதர 1988 ஆம் ஆண்டில் "நுஸ்ரத்துல்இஸ்லாம்" நற்பனி மன்றம் என பெயர்
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -5
கொள்ளுமேட்டில் சங்கங்கள் சாதித்த சமுதாய சாதனைகள் அளப்பெரியது! அல்ஹம்துலில்லாஹ்!!
நம் ஊரில்1970 ஆம் ஆண்டு வரை இரவு நேரங்களில்தான் திருமணங்கள் நடைப்பெறும், ஊர் மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக நடத்துவது வழக்கம்.1971 ஆம் ஆண்டுக்குக்கு பிறகுதான் பகல் நேர திருமண நிகழ்வுகள் வழக்கத்திற்கு வந்தது.
நம் பகுதி விவசாயம் கொடிக்கால் பயிர் நிறைந்த பகுதி என்பதால் காலை முதல் மாலை வரை கடுமையான வேலை சுமையால் ஊரே ஆட்கள் அரவம் இன்றி இருக்கும், நல்ல காரியங்களுக்கு நான்கு பேர் கிடைப்பதே பெரிது இதை கருத்தில் கொண்டு 1977 ஆம் ஆன்டு உருவானதுதான் கொள்ளுமேடு "இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்".
50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒருங்கினைத்து மாதசந்தா ரூ 1 என்ற வீதம் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் பங்கேற்பது ஏழை எளியவர்கள் காரியங்களில் நின்று நமது மேற்பார்வையில் சிறப்பாக நடத்துவது, சமுதாய அமைப்புகள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, ஊர் பொது நிழ்ச்சிகளை ஒன்றினைப்பது, பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வ பனிகளை முன்னேடுப்பது என தீர்மானித்து துவங்கபட்டதுதான் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்!!
அதே கால கட்டத்தில் இளைஞர்களை நோக்கி அரபுநாடுகள் வேளை வாய்ப்பு என்ற வலை வீச,அந்த வலையில் சிக்கிய நம் இளைஞர்கள் கனவுகளோடு கப்பல் ஏற
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -4
நம் முன்னோர்கள் நமக்காற்றிய நற்பணிகளில் சில! செவிவழி செய்திகள் மற்றும் என் நினைவுகளை தருகின்றேன்!
கொள்ளுமேட்டின் தலைமைச் செயலகம்!கம்பீர தோற்றத்தில் மிடுக்காய் காச்சியளிக்கும் ஜாமிஆ மஸ்ஜித் இறை இல்லம்தான்!
1936 ஆம் ஆண்டு ஊர் கூடி கட்டி எழுப்பிய இவ் இறையில்லம் நம் மக்களின் கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்குகிறது!
பள்ளியின் மேற்பரப்பில் கருங்கல் சிலாப் அடுக்கி,அதை ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிவைத்து மேல்தளம் மூடப்பட்டிற்கும்.உள் கூடானது ஒன்பது கூடாரங்களோடு எட்டு பிரமாண்ட தூன்களால் நிலைநிறுத்தப்பட்டிற்கும்
பளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்!!
பளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்!!
விஷேசமான இரவுகள் வந்தால் கண்ணாடி குடுவையில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து இருப்பார்கள் இரவுநேரங்களில் காண்பதற்கு அழகாக இருக்கும்!!
ஊரின் கம்பீரத்தை பறைச்சாற்றி வந்த வான் உயர்ந்த இரண்டு மினராக்கள் ஒன்றில் 1960 ஆம் ஆண்டு மக்கள் எல்லாம் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மிகப்பெரும் சத்தத்துடன் பள்ளியை இடி தாக்கியது.அத்தாக்குதலில் தெற்கு பகுதி மினரா சேதம் அடைந்தது,பின்பு 1993 ஆம் ஆண்டு சேதமடைந்த மினரா
கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்
தொடர் -3
1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே!!
வெற்றிலை கொடிக்காலில் ஊடுப்பயிராக வாழை,கத்தரிக்காய் ,வெண்டை,மிளகாய் கிழங்கு வகைகள் கீரை வகைகளும் சேர்த்து பயிரிடப்படும்.
வீட்டிற்கு வேண்டிய காய்கறிகள் மட்டுமின்றி உணவு சமைக்க தேவையான விரகு வரை அனைத்தும் கிடைத்துவிடும்!
இங்கே வேலை வாய்ப்புகள் நிறைந்து கிடந்தன பல ஊர் மக்கள் வேலை தேடி இந்த ஊரில் குவிந்த வன்னம் இருப்பார்கள்!!
பயிர் கிடங்கு வெட்ட நெல்லிகுப்பதிலிருந்து வளைந்த மம்மட்டியுடன் கயிர் சேர்த்து கையில் எடுத்து வருவார்கள் அது கண் கொள்ளாகாட்சியாக இருக்கும்
ஆவணி மாதம் முழுவதும் வேலை இருக்கும்!! சித்திரை மாதம் வந்து விட்டால் பயிர் விட்டம், பக்கவிட்டம் கட்ட, சவுக்கு மரம் அதன் கிளை சிம்பு தெற்கிலிருந்து ஏற்றிவரும் மாட்டு வண்டிகளின் அனிவகுப்பு காலை 7 மணிக்கு துவங்கும.
தைமாதம் வந்துவிட்டால் எருவு உரம் ஏற்றிய மாட்டு வன்டிகள் வடக்கில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)