Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 17, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -9
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீராணம் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களை இணைக்கும் நோக்கில் நீர்வழித்தடம் அமைத்து படகு போக்குவரத்தும் துவங்கியது!
கிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.
காலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓடம் இயக்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியாக ஒய்யாரமாக ஓடம் ஏரி பயணித்தார்கள்,இதன் பயனாக மேற்கில் விளைந்த பொருட்கள் கிழக்கு கரைக்கு வர, பல பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தது நிலக்கடலை, சோழம்,மாங்காய்,மாம்பழம் முந்திரிப்பழம்,எலந்தை பழம், கொடிநாவல் பழம்,வெள்ளேரி பிஞ்சு, தர்பூசணி,கம்பு கேள்வரகு, மூங்கில் படல் என அனைத்து பொருட்களும் ஓடம் ஏரி வந்து தலை சுமையாக கிராமங்களை வந்து சேறும்!!
கொள்ளுமேடு இராயநல்லூர் நத்தலை மானியம்ஆடூர்
லால்பேட்டை போன்ற கிழக்குகரை பகுதிகளில் விளையும் பொருட்கள் நெல்,வெற்றிலை, முருங்கைகீரை அகத்திகீரை, கரும்பு, வாழைக்காய், கத்தரிக்காய்,வாழைஇழை எனஅனைத்தும் மேற்கு கரைக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும்.ஏற்றுமதி இறக்குமதி என சிறு சில்லரை சந்தை சந்தோஷமாக நடந்தது.
அன்று திருச்சின்னபுரம் ஏரிக்கரையின் உள்பகுதியில் வெற்றிலை வாழை இழை ஏலம்விடும் மார்கட் இருந்தது மாலை 3 மணிக்கு துவங்கி 5 மனிவரை நடக்கும் டீக்கடை,பெட்டிக்கடை, ஸ்டால் வண்டி என ஒடத்துரை களைக்கட்டி நிற்கும்.1988 ஆம் ஆண்டு வரை கூலாப்பாடி ஒடத்துரை அமைதியாக ஆர்பாட்டம் இன்றி இயங்கியது.
அன்றைய வீராணம் ஏரியில் இன்பச் சுற்றுலா என்று கூறி பள்ளி மாணவ மாணவிகள்
டூர் செல்வதும்,ஊர் இளைஞர்கள் எல்லாம் உல்லாசமாக ஒடம் ஏறி டூர் போவதும் வாடிக்கையானது.30 நபர் வரை பயணிக்கதக்க தோனியை மைக்செட் டியூப்லைட் சீரியல் செட்டால் அலங்கரித்து இரவு நேரங்களில் ஏரியை சுற்றி வருவதும் மனதுக்கு மகிழ்ச்சியான தருனம்.சுக்கான் பிடிப்பவன் கையில்தான் 30 பேரின் உயிரும் இருக்கும் பாதுகாப்பான பயணம் இல்லை அது. அப்போதெல்லாம் நீச்சல் தெரியாத எந்த ஆணும் பெண்னும் இருப்பதும் இல்லை.!
1980 ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் தமிழகஅரசின் மீன்வளத்துரை மிகச்சிறப்பாக செயல்பட்டது வீராணம் ஏரியில் மீன்பிடித்தொழில் கொடிக்கட்டி பறந்தகாலம் நூற்றுக்கணக்கில் மீன்பிடி படகுகள் கட்டுமரம் என ஏரி முழுவதும் மீன்களை வழைவீசிப் பிடிக்கும் மீனவர்கள் காலை 5 மணிக்கு துவங்கி 8 மணிக்கு கரை வருவதும் மாலை 3 மணிக்கு இறங்கி 6 மனிக்கு கரையேருவதும் ஊத்தாவைத்து குருப்பாக இறங்குவதும் கண் கொள்ளாகாட்சியாக இருக்கும்.
பிடிப்பட்ட மீன்கள் கொள்ளுமேடு கடைத்தெருவிற்கு எடுத்துவரப்பட்டு வியாபாரம் நடக்கும் காலையில் காஸ்ட்லியாகவும் மாலையில் மலிவாகவும் விற்பனை படுஜோராக நடக்கும் கோழிக்கன்டை, மிருகலா, ஜிளேபி, விரால் கெளுத்தி, உளுவை, விளாங்கு, ஆரா மீன்கள் என விதம் விதமான மீன்கள் கிடைக்கும் அரைகிலோ முதல் 5கிலோ அளவுக்கு வளர்ந்த மீன்கள் சாதாரனமாக கிடைக்கும்.
ஊரைச்சுற்றி ஓடும் வாய்கால் குளம் குட்டை என பல பகுதிகளிலும் மீன்கள் இலகுவாக வளர்ந்து காணப்படும் தூண்டில் போட்டும் வாய்காலின் குறுக்கே அனைகட்டி நீர் இரைத்தும் மீன்பிடிப்பார்கள்.
ஏரியின் நீர்பரப்பில் கிடைக்கும் மீன்களைத் தேடி பறவை இனங்கள் பல மைல்தூரத்தில் இருந்து வருவதும் வாடிக்கை காலை சூரியன் உதிக்கும் முன்பே பசித்த வயிறுடன் வருவதும் மாலைப்பொழுது மறைந்த வேலையில் கூட்டை அடைய பறந்து செல்லும் பறவையினங்களை பார்த்து ரசிக்க கண்கள் பல வேண்டும் அத்தனை அழகு!
இறைத்தேடி வரும் பறவைகளை வேட்டையாட நரிக்குறவர்கள் நாலாபுரமும் அழைந்து திரிவார்கள் ஊருக்கு ஊர் தங்கி காடை கவ்தாரி, நொள்ளை மடையான் போன்றவற்றை கண்ணிவைத்து பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.வேட்டையாடிய பறவைகளை விற்று வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வியாபரம் விசித்திரமானது 200 ரூபாய்க்கு பேரம் துவங்கி 20 ரூபாய்க்கு விற்கும் வினோதம்!.
சென்ற தலைமுறையின்
சிறப்பான வாழ்கைமுறை
இனி வருமோ? அது ஒரு
இனிமையான நாள்!!
நினைவுகள்
தொடரும்
27 12 2018
அன்புடன்
அன்வர்தீன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...