Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்தொடர் -12
கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தங்களின் எல்லைகள் பிரித்து செயல்பட தொடங்கின.கொள்ளுமேடு ஊராட்சி மன்றம் எல்லையை பிரித்து தன் செயல்பாட்டை தனித்துவமாக மிகச் சிறப்பாக செயல்பட அன்றைய பெரியவர்கள் பலர் காரணமாக இருந்தார்கள். நம் ஊரைப் பொருத்த வரை கிராம பஞ்சாயத்தும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்தே செயல்படும்!
1996 ஆம் ஆண்டு வரை நம் ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களால் ஏகோபித்த முடிவில் விடப்பட்டு தலைவர் மற்றும் துனை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பது வழக்கமாக இருந்தது! தமிழகம் முழுக்க ஊராட்சி மன்ற தேர்தல்கள் களைக்கட்டும் இங்கோ ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட மக்கள் ஒரு மணி நேரத்தில் அன்னப்போஸ்டாக அதிகாரத்தை அள்ளித்தருவார்கள்!அல்லாஹ் இந்த அழகிய கிராமத்தை
கண்ணியமாக வைத்து இருந்தான்.பதவிகள் ஒருதலை பட்சமாக கொடுக்கப்பட்டபோது பிரச்சினைகளும் எழத் தொடங்கின.
நூற்றுக் கணக்கான புளியமரங்கள், மாமரம் தெண்ணை மற்றும் பனை மரங்கள் வீட்டு வரி, குளம் குட்டை மீன் ஏலம் இவையே ஊராட்சி மன்றத்தின் வருமானமாக இருந்தது.
1960 ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் காமராஜ் அவர்களும் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமாகிய காயிதேமில்லத் அவர்களும் கொள்ளுமேட்டிற்கு வருகை தந்து பிரமான்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வை இன்றும் நம் பெரியவர்கள் நினைவுகூறுவர்.அதன் பலனாக நமதூர் முன்னேற்றமும் பிரபலமும் அடைந்ததை மறுக்க முடியாது.
அன்று முதல் இன்று வரை நம் ஊர் அரசியல் மற்றும் ஆன்மீகம் என இரண்டிலும் இனைந்தே பயணிக்கும் ஊராகவே இருந்து வருகிறது.கொள்ளுமேட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்கள் மர்ஹும் நாட்டார் அப்துல் அலி அவர்களின் தந்தை,மர்ஹும் மேனேஜர் அப்துர் ரஹ்மான் மற்றும் மர்ஹும் குலாம் காதர் ஆவர்.இவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனைவாதிகளாகவும் பொது நலனில் அக்கரை கொண்டவர்களாகவும் இருந்தனர்.
அன்றைய கொள்ளுமேடானது பள்ளிவாசல் தெரு சின்னதெரு தோப்புத் தெரு என மூன்று தெருக்கலுடன் ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளுமே நிறைந்து காணப்பட்டது.ஊரின் முதல் மெத்தை வீடு ஆக்கூரார் மர்ஹும் பாவாஜி அவர்கள் வீடு மட்டுமே!அப்பெரியவரை எல்லோரும் மெத்தத்தா என்றே அன்பாக அழைப்பார்கள்!
பள்ளிக் கூடத்தின் பின்புறத்தில் வளையக்காரர் சுல்தான்மைதீன் யூசுப் சகோதரர்கள் செக்கு வைத்து கடலை எண்ணை நல்லெண்ணை உற்பத்தி செய்து மளிகை கடை வியாபாரம் நடத்தி இருக்கிறார்கள்.விருத்தாசலம் சந்தையில் இருந்து மனிலாபயறு எள் இவைகளை கொள்முதல் செய்து மாட்டுவண்டியில் ஏற்றிவந்து செக்கில் அரைத்து வியாபாரம் நடக்கும்.சுற்றுப்புற கிராம மக்கள் எல்லாம் நம் ஊருக்குதான் வருவார்கள்.
காரியம் ஆகும்வரை 
காளைப் பிடிப்பதும்
காரியம் முடிந்தால் 
களட்டி விடுவதும்
காலத்துக்கும் தொடர்வதை
கைவிட்டால் காலத்திற்கும் 
கண்ணியமாக வாழலாம்!
தொடரும்
என்றும் 
அன்புடன் 
அன்வர்தீன் 
17 1 2019

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...