தொடர் -8
வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா?
ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்கிட்டு கூறுவதில்லை,அந்நிகழ்வு 1927 ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு குறிப்பு உண்டு. அக்குறிப்பானது நமதூர் இரட்டை மதகு சட்டர்க்கு மேற்பரப்பில் சிமென்ட்டால் எழுதப்பட்டிருக்கும்.
கொள்ளுமேட்டில் "ஒடப்பான்கரை" என்னும் பெயரில் சிரிய நிலப்பரப்பு இன்றும் அறியப்படுகிறது,அப்பகுதி 1977 ஆம் ஆண்டு வரை பள்ளப்பகுதியாகவே காணப்பட்டது அந்த நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயம் செய்வதில் திறமையானவர்கள் அந்த நிலத்தில் மட்டும் எல்லா காலத்திலும் தண்ணீர் 1 அடிக்குமேல் குளம்போல கட்டிகிடக்கும் குதிரைவால்,பொண்ணி ரக நெல் பயிரிடுவது வழக்கம்.மற்ற காலங்களில் கோரை முளைந்துகிடக்கும்.
அந்த நிலப்பகுதி முழுக்க விரால் மீன்கள் நிறைந்து
கானப்படும் பிறகு அந்த பள்ளங்களை மண்ணை நிறைத்து மேடாக்கி சமன்படுத்தி விட்டார்கள்.தண்ணீர் நிரம்பிய சிறிய குட்டை ஒன்று இன்றும் கானகிடைக்கும் இதுவே ஏரிக்கரை உடைந்ததற்க்கு சாட்சியாய் இருக்கிறது!இன்று மழைகாலம் வந்துவிட்டால் மீடியாக்கள் TRP க்காக வீராணம் ஏரி உடைந்ததாக செய்திவாசிப்பது வாடிக்கையாகிபோச்சு.
வீராணம் ஏரி 16 கிலோமீட்டர் நீளம் 4 கிலோமீட்டர் அகலத்தில் பறந்து விரிந்து பார்க்க பார்க்க அழகும் வியப்பும் தரக்கூடிய மதகுகள் நிறைந்த பகுதி,லால்பேட்டை முதல் கலியமலை வரையே அகலமான பகுதியும் ஆழம் மிகுந்ததாகவும் அமையப்பெற்றது நத்தமலைக்கும் கொள்ளுமேட்டிற்கும் நடுமையமாக ஏரியின் நடு மய்யம் இருக்கிறது அப்பகுதியே "திட்டு" என்று அறியப்படும் எப்போதும் நானல்கள் முலைத்து பசுமையாக நிற்கும் மேட்டு பகுதி அது.
மே ஜுன் மாதங்கள் வந்துவிட்டால் வறட்சியின் உக்கிரத்தால் நீர்குறைந்து திட்டு தெரிய ஆரம்பிக்கும்,அப்போது மக்கள் கனித்துவிடுவார்கள் ஏரி நீர் இன்றி காயப்போகிறது என்று.மீன்பிடி தொழிலாளர்கள் வலை உழர்த்தவும் ஓய்வெடுக்கவும் "திட்டை" பயன்படுத்துவார்கள்.
1963ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசால் வீராணம் ஏரிக்கரைக்கு விடிவு காலம் பிறந்தது!வழுவான சாலையுடன் கரையை பாதுகாக்க அளவாரிகட்டி முடித்து
கனரக வாகன போக்குவரத்தையும் துவக்கிவைத்தார்கள்!மக்கள் பயன்பாட்டிற்கு பஸ் வசதியும் செய்து வைத்து சாதனை படைத்தார் அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள்!
கனரக வாகன போக்குவரத்தையும் துவக்கிவைத்தார்கள்!மக்கள் பயன்பாட்டிற்கு பஸ் வசதியும் செய்து வைத்து சாதனை படைத்தார் அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள்!
எரிக்கரைரோட்டில் சேத்தியாதோப்பு To கொள்ளுமேடு வரை "கண்ணன் மோட்டார் சர்வீஸ் பஸ்" தன் முதல் பயண சேவையை துவங்கியது மக்கள் மகிழ்ச்சி பெருக வரவேற்று மகிழ்ந்தனர்.அடுத்த ஆறு மாதங்களில் வழித்தடம் காட்டுமன்னாகுடி வரை நீட்ட பின்பு சிதம்பரம் To கொள்ளுமேடு புதிய வழித்தடத்தை அரசு அனுமதியளிக்க வந்தது "கணபதி பஸ் சர்விஸ்"அதற்கும் மக்களிடம் அமோக வரவேற்பை கண்ட அரசு பின் அவ்வழித்தடத்தையும் மன்னார்குடி வரை நீட்ட அடுத்து வந்தது "ராஜராஜேஸ்வரி" பஸ் சிதம்பரம் to கொள்ளுமேடு பின் அதுவும் வழிமாற.அடுத்து புதிய வழித்தடத்தில் விருத்தாசலம் To கொள்ளுமேடு "ராஜலட்சுமி பஸ்" 40 வருடத்திற்கும் மேலாக வழித்தடம் மாறமல் தன் பெயரை மட்டும் "கணேஷ்"என மாற்றி மக்கள் மத்தியில் இன்றும் சேவையாற்றி வருவது நம் ஊருக்கு கிடைத்த அங்கிகாரம் அல்லவா?
இரண்டு சிங்கள் மட்டுமே வரும்
அந்த பஸ்சை பிடிக்க மக்கள் போட்டி போட்டு நிற்பார்களே அண்ணாமலை யுனிவர்சிட்டி மாணவர்கள் வெற்றிலை மண்டி செல்லும் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்கள் பயன்பாட்டில் அது தவிர்க முடியாத தங்க ரதம்தான்!!
அந்த பஸ்சை பிடிக்க மக்கள் போட்டி போட்டு நிற்பார்களே அண்ணாமலை யுனிவர்சிட்டி மாணவர்கள் வெற்றிலை மண்டி செல்லும் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்கள் பயன்பாட்டில் அது தவிர்க முடியாத தங்க ரதம்தான்!!
தொடரும்
நினைவுகள்
நினைவுகள்
அன்புடன்
அன்வர்தீன்
அன்வர்தீன்
20 12 2018
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...