Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -7
நம்ம ஊரு கல்யாணம்!
1985ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த திருமணங்கள்-ஊர் உறவுகள் பெரியவர்கள் நண்பர்கள் ஆண் பெண் குழந்தைகள் என எல்லோரும் ஒன்று கூடி குதூகலத்துடன் கொண்டாடிய காலம் சடங்கு சம்பிரதாயம் ஊர் வழக்கம் என ஒருவாரத்திற்கு ஓசி சாப்பாடு களைக்கட்டும்.
மாப்பிள்ளை தோழனாக வரும் நண்பர்கள் ஒரு மாதத்திற்கு விலகாமல் உடன் நிற்க, உறவுக்காரர்கள் 15 நாட்கள் வரை கல்யாண வீடே கதி என கிடக்க, 40 நாள்சீறும் நடையாய் நடக்கும்.புது மாப்பிள்ளையோ புனைப் பெயரில் அறியப்பட பெண் வீட்டார் மருமகனுக்கு பேட்டரிலைட், குடை, சைக்கிள் செருப்பு, மைனர்சங்கிலி, மோதிரம், வாட்ச் என வாங்கிதருவது வழக்கம்.செலவுகளை சிறமத்துடன் ஏற்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்ப்பார்ப்பை போக்கும்வகையில் சீதனங்களையும் சீர்வரிசைகளையும் சிக்கனம் இன்றி
நடத்துவர்!
மாப்பிள்ளை வீட்டார் பாக்குவைத்து அழைப்பதும் வீட்டிற்கு 10 பாக்குகளோடு அழைப்புக் கொடுத்தாள் ஆண்களுக்கு மட்டும் அழைப்பு என்றும் 11 பாக்குகளோடு அழைப்பு கொடுத்தாள் குடும்பத்தார் அனைவருக்கும் அழைப்பு என்றும் அழைப்பு முறையே சிறப்பாக நடக்கும்.
பரிசம்போட மாப்பிள்ளை வீட்டார் ஊரையே திரட்டும் வினோதம், 11 13 15 என ஒற்றைபடையில் பட்டுபுடவை,பழம்,தேங்காய் வெற்றிலை பாக்கு, சுன்னாம்பு, சீனி, பிஸ்கட் போன்றவற்றை சஹான்களில் ஏந்தி மக்கள் பெண்வீட்டிற்கு செல்வார்கள்.பெண்வீட்டிற்கு முன்னறே சென்றுவிடும் ஜமாத்தார்கள் மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்களை நோக்கி இங்கு வந்ததன் நோக்கம் என்ன?என்று கேட்க மாப்பிள்ளை வீட்டுதரப்பில் இன்னார் மகனுக்கு பெண் கேட்டு வந்தோம் என பதில் சொல்வர். ஊர் பணம் வட்டாவில்வைத்து சுற்றிவர முத்தவள்ளிக்கு கைமாறும், உடன் துஆ பின் டீ பிஸ்கட் பறிமாரப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெரும்!
திருமணம் தேதி வளர்பிறை கணக்கிட்டு தேய்பிறை, சனி,செவ்வாய் கிழமை தவிர்த்து முடிவாகும்.கல்யாணத்தின் முதல் நாள் மாப்பிள்ளை வீட்டில் பந்தல் கால் ஜமாத்தார்கள் கூடி துஆ உடன் ஊன்றப்படும்.பந்தல் அமைத்து வசதிக்கேற்ப அலங்கரித்து லைட் செட்டிங் மைக் செட் வைத்து செவ(கல)ர்தாள் ஒட்டி பந்தள் கலர்புல்லாக ஜொலிக்கும்.ஹனீபாவின் "ஓரு கையில் இறைவேதம் மறு கையில் நபிபோதம்"என்ற பாடல்கள் காற்றோடு கலந்து வரும்,பாடலை நடைமுறைபடுத்த முடியாமல் பாட்டை ரசித்து பழகிய காலம்.
வரதட்சனை,தோழன் பணம்,சர்பந்து சீர்வரிசை என பெண்வீட்டாரை பிளிந்துவிடுவார்கள் அது விழிப்புணர்வில்லா அறியாக்காலம்.வெளியூர் விருந்தினர் குடுப்பசகிதம் வர கல்யாணம் களைக்கட்டும் அதிகாலை,சமையலுக்காக அடுப்புக்கு தீ மூட்ட ஜமாஅத்தார்கள் துஆ ஓதி துவங்கிவைப்பர்! பண்டாரிகளின் கைபக்குவத்தால் ஊரே மணக்கும்,நெய் வாசம் சுண்டி இழுக்கும்.
வாழ்த்து தந்தி, வாழ்த்து மடல் என தெருவே களைகட்ட 7 மணிக்கு மாப்பிள்ளைக்கு (முகப்பின்)சேவிங் செய்ய பதியாரி வீட்டுக்கே வர பால்கலந்த தண்ணீரால் முகம் கழுவி ஆரம்பிக்க, நண்பர்கள் புடைச்சூல சிறு விளையாட்டு அரங்கேரும்! பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் 10 பைசா 20 பைசா என பால் கிண்னத்தில் போடப்போட அமட்டன் முகவேளையை முடிப்பான்.இருதரப்பு இளைஞர்களும் தங்களின் வசதிகேற்ப விளையாடி நேரத்தை கடத்துவர்.பெரியவர்கள் மாப்பிள்ளை ரெடியாகுலயா? என சத்தம் கொடுக்கும்வரை அமட்டனும் இளைஞர்களும் விடமாட்டார்கள்.
மணவிழா நேரம் அறிவிக்க ஊர் மக்கள் மணமகன் வீட்டில் திரன்டுவிடுவர் துஆ ஓதி மாலையிட்டு பைத் ஓத நகர்வலம் கால்நடையாக மெல்ல நகர்ந்து ஊரை சுற்றி வந்துசேரும்.நிக்காஹ் மஜ்லீஸ் வந்த மாப்பிள்ளைக்கு திருமண ஓப்பந்தம் ஒருபுறம் நடக்க மறுபுறம் அன்பளிப்புகள் குறிப்பெடுக்க துஆ முடித்து வாழ்த்து பாடல் பாட நண்பர்கள் மைக்பிடித்து அன்பளிப்பை பெயர் சொல்லி வாசிக்க வாழ்த்துமடல் வெளிநாட்டு தந்தியை படித்து முடித்து முஷாபா உடன் நிறைவுபெறும்.
நம் ஊருக்கான அக்மார்க திருமண வாழ்த்துப்பாடல் இதுதான்..
சோபன மா மகனே!
சோபன மா மகனே!!
சுப சோகிதமான சுகானந்தம் வீசிடும் வாழ்வே!!!
பார் புகழ் கொள்ளுமேடு
பதி புகழ் ஓங்க
இளைஞர் மன்றம் வாழ்திடவே!!
இப்பாடல் நம் முன்னோர்களின் இனிய குரலில் மரன மாஸ்ஸாக இருக்கும்!
விருந்தினர்கள் மணமகன் இல்லத்தில் நிறைந்து நிற்க,செம்பு சட்டிகள் திறந்து உணவுகள் தட்டையில் நிறைத்து அங்கே ஒரு துஆ உடன் செம்புபாய் இட்டு அதில் சிறுவர் சிறுமிகள் முதல் பந்தி நடத்தி,பின் ஆண்கள் பந்தி பெண்கள் பந்தி முடிய 3 மணி
கல்யாண வீட்டார் பெருமூச்சு வாங்க ஓடி உழைத்த களைப்பில் நிம்மதியாவர்!
பெண் அழைப்பு மூன்று முறை நடக்க தோழிகள் சகிதம் பொண்னு பொட்டி வண்டியில் மாப்பிள்ளை வீட்டிற்கு வருவதும் சொந்த பந்தம்கள் கூடி நிண்று வரவேற்பதும் அன்பாவுகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.
நாகரிகம் மற்றும் விளிப்புணர்வின் உச்சத்தில் நிற்கும் இன்றைய நம் சமுதாயம் வரதட்சனையில்லா சுன்னத்தான எளிய திருமணங்களை நோக்கி நகர்ந்துகொன்டு இருக்கிறது.!அல்ஹம்துலில்லாஹ்.....
-நன்றி M.I அன்வர்தீன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...