Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2011

சிதம்பரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் : பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது

சிதம்பரம் : சிதம்பரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது. சிதம்பரம் மேல வீதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1904ம் ஆண்டு கட்டப்பட்ட கடலூர் மாவட்டத்திலேயே பழமையான கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பல முறை மராமத்து பணிகள் மேற்கொண்ட போதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு மாறியது.

இந்நிலையில் இக்கட்டடத்தை இடித்து விட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட முடிவு செய்யப்பட்டு காவலர் குடியிருப்பு வாரிய கட்டடம் கட்டும் பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக பழைய போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலைய கட்டடத்திற்கும், குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையம் மாடிக்கும், மகளிர் பிரிவு குற்றப்பிரிவு கட்டடத்திற்கும் மாற்றப்பட்டது. தஸ்தாவேஜிகளும் உடனடியாக மாற்றப்பட்டதையடுத்து கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது. முழுமையாக இடிக்கப்பட்ட பிறகு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி ஒரு மாதத்தில் துவங்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...