Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 13, 2011

ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி

அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்காக, சுருட்டு, பீடி, பான்பராக், மொபைல் போன், ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருட்கள் உட்பட பலவற்றின் மீதான விற்பனை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், கடந்த அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை விட்டுச்சென்றுள்ளது. எனவே, புதிய நலத் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தவும், நிதி நிலவரங்களை சீரமைக்கவும், கூடுதல் வருவாயை திரட்ட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இந்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கும் பல நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேற்று முன்தினம் முதல், விற்பனை வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
ட் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும், "வாட்' வரி, 4 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் கருதி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுக்கான 4 சதவீத, "வாட்' வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ட் 12.5 சதவீதம், "வாட்' வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு, இனி, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். ஆந்திராவில் ஏற்கனவே, 14.5 சதவீதமும், கர்நாடகாவில், 13.5 சதவீதமாகவும், குஜராத்தில் சில பொருட்களுக்கு, 15 சதவீதமும், வேறு சில பொருட்களுக்கு, 20 சதவீதமும், "வாட்' வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ட் ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த, ஜவுளி மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு தற்போது, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், சிட்ட நூல் மற்றும் கைத்தறி துணிகளுக்கான, "வாட்' வரி விலக்கு தொடரும். ட் சமையல் எண்ணெய் விற்பனையில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை விற்று முதலை கொண்டவர்களுக்கு, இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது, 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சமையல் எண்ணெய் பெரிய டீலர்கள், வரி வரம்பிற்குள் வருவர். (கிட்டத்தட்ட அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் வரம்புக்குள் வந்துவிடும்.) புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள், "வாட்' வரியின் கீழ் வராத பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது விதிக்கப்படும், 12.5 சதவீத வரிக்கு பதிலாக, இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். பான் பராக், மூக்குப்பொடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, இவற்றிற்கும் இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். அதேபோல், பீடி மற்றும் பீடி சார்ந்த புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, அவற்றுக்கு, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். மொபைல் போன், எல்.சி.டி., "டிவி', டி.வி.டி., - சி.டி., - ஐபாட், ஐபோன் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு தற்போது விதிக்கப்படும், 4 சதவீத வரி, இனி, 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்புகள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது கணக்கு : வரி உயர்ந்தால் விலை உயரும் என்பது தான் பொதுமக்களின் கருத்து. 1 சதவீதம் வரி உயர்த்தினால், 10 சதவீதம் வரை பொருள் விலை உயரும் என்பது, அனுபவம். ஆனால், வணிக வரித் துறை அதிகாரிகளின் சித்தாந்தம் வேறுவிதமாய் இருக்கிறது. "உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய லாபம், அதே அளவில் தொடரும் என்பதால், உயர்த்தப்பட்ட வரி வீதம் மட்டுமே, பொருட்களின் விலையில் எதிரொலிக்கும்' என்கின்றனர்.
"விலை உயர்வால் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில நிறுவனங்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து, பழைய விலைக்கே கூட பொருட்களை விற்க முன்வரலாம்' என்பது அவர்கள் கருத்து. நடைமுறை உண்மை, நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...