புதுடெல்லி:சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்தியாவில் 150 மாவட்டங்களில் துவக்கிய வளர்ச்சி திட்டங்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு கவன பரிசோதனை துவக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட திட்டத்தை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு தின பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் அவர். அமைச்சகம் துவக்கிய திட்டங்கள் குறித்து புகார் எழுந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் திட்டம் ஏன் உபயோகமாகவில்லை என்பதை எவரலாலும் கூற இயலவில்லை. இனியும் ஏராளமானவை செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு 60 லட்சம் ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் 750 பெல்லோஷிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டம் உள்ளது. செலக்ஷன் கமிட்டி கருத்தை தெளிவாக தெரிவிக்காததால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வக்ப் மசோதா நிறைவேற்ற வாய்ப்பில்லை என சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...