Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 11, 2011

மத்திய மந்திரிசபை மாற்றம்: புதுமுகங்கள் 12 பேருக்கு வாய்ப்பு; தினேஷ் திரிவேதி ரெயில்வே மந்திரி

மத்திய மந்திரி சபையில் சில இலாகாக்கள் காலியாக இருப்பதாலும், சில மந்திரிகளின் செயல்பாடு சிறப்பாக இல்லாததாலும் மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மன் மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இது தொடர்பாக 3 தடவை அவர் ஆலோசனை நடத்தினார்.

மந்திரி சபை மாற்றம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரபிரதேச ரெயில் விபத்தில் 63 பேர் பலி ஆனதாலும், மத்திய அரசு தலைமை வக்கீல் கோபால் சுப்பிரமணியம் திடீரென ராஜினாமா செய்வதாக கூறியதாலும் மந்திரி சபை மாற்றம் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தெரிகிறது.

பிரணாப்முகர்ஜி (நிதி), ப.சிதம்பரம் (உள் துறை), ஏ.கே.அந்தோணி (பாதுகாப்பு), எஸ்.எம்.கிருஷ்ணா (வெளியுறவுத் துறை) ஆகிய 4 பேரின் இலாகாக்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகி உள்ளது.

மந்திரி சபை மாற்றத்தின் போது காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 10 முதல் 12 புதுமுகங்கள் மந்திரியாக வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்பட 6 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநில மக்களை கவரும் வகையில் மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

மத்திய அரசில் முக்கிய அங்கும் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மந்திரி சபையில் சில முக்கிய இலாகாக்களை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் கொறடா சுதீப்பண்டோ பதயா தற்போது பழனி மாணிக்கம் வகித்து வரும் ராஜாங்க நிதி மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி வகித்து வந்த ரெயில்வே இலாகா, முகில்ராய்க்கு வழங்கப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தினேஷ்திவேதி பெயர் ரெயில்வே மந்திரி பதவிக்கு அடிபடுகிறது.

தி.மு.க. சார்பில் புதிய மந்திரிகள் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. என்றாலும் தற்போது ராஜாங்க நிதி மந்திரி ஆக இருக்கும் பழனி மாணிக்கம் காபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுசீல்குமார் ஷிண்டே (69) அடுத்த ஆண்டு நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என்பதால் அவர் மந்திரி பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்று தெரிகிறது.

உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் சல்மான் முர்ஜித்துக்கு முக்கிய இலாகா கிடைக்க வாய்ப்புள்ளது. லல்லு பிரசாத் யாதவுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...