Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 11, 2011

புதிய ரேஷன் கார்டுகள் 2 மாதத்தில் வழங்கப்படும்: அமைச்சர் புத்திசந்திரன் தகவல்

தமிழக உணவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் புத்திசந்திரன் நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டியில் உள்ள சிவில் சப்ளை குடோனுக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்ததும் அமைச்சர் புத்திசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பதுக்குவோர் மற்றும் கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகள் 2 மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களில் 85 சதவீதம் பேருக்கு பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் எண்ணை கிடைக்காத 15 சதவீத பேர்களுக்கு டோக்கன் பெற்று அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அமைச்சர் புத்திசந்திரன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...