மாஸ்கோ, ஜுலை 11-
ரஷியாவின் மத்திய பகுதியில் லோவ்கா ஆறு ஓடுகிறது. இதில் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று ஒரு சொகுசு கப்பலில் 188 சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்தனர். தடார்சன் என்ற இடத்தில் சென்ற போது அந்த கப்பல் தண்ணீரில் மூழ்கியது.
இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள், அங்கு விரைந்து வந்தனர். அவசர காலத்தில் தண்ணீரில் மூழ்கும் 50 வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றினார்கள்.
அவர்களில் 30 குழந்தைகள் உள்பட சுமார் 70 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 103 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் ஒருவர் பிணம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் பிணங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கப்பல் விபத்துக்கு மோசமான தட்பவெப்ப நிலையும், அதிக அளவு ஆட்கள் ஏற்றியதும் காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த கப்பல் பழையது என்றும், என்ஜின் கோளாறினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.
இதற்கிடையே இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கேரியாவை சேர்ந்தவர்கள். அந்நாட்டை சேர்ந்த 85 பேர் அதில் பயணம் செய்தனர்.
ஜூலை 11, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...