காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் இருந்து, கடந்த 12 ஆண்டுகளில், 2வது முறையாக, ஜூலை மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தள்ளி போனது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் தமிழகத்தில் போதிய அளவு கோடை மழை பெய்ததால் மேட்டூரில் 83 அடி தண்ணீர் தேங்கியது. இதனால் 8 ஆண்டுகளுக்கு பின் எப்போதும் தண்ணீர் திறக்கப்படும் தேதியான ஜூன் 12ம் தேதிக்கும் முன்பே 6ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டு வீராணத்திற்கும் திறக்கப்பட்டது.
வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடி தண்ணீரில் தற்போது 507 கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. சென்னைக்கு தண்ணீர் சென்று வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளில் ஜூலை மாதம் வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இது இரண்டாவது முறையாகும். இதனால் வீராணம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள வீராணம் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை ஆர்வத்துடன் முன் கூட்டியே துவங்கியுள்ளனர். இருந்தாலும் ஏரிக்கு அதிக நீரை தேக்கி வைத்து விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...