இந்தக் காலத்தில் எல்லா அறுவைச் சிகிச்சை முறைகளிலும் அடுத்தடுத்து முன்னேற்றம் அதிகரிக்கிறது. உடலின் சிக்கலான பாகங்களில்கூட, துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பங்கள் வளர்கின்றன.
அறுவை சிகிச்சையில் மனிதத் திறன் ஒரு பக்கம் இருந்தாலும், தொழில்நுட்பமும் இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு முக்கியமான ஒன்று!
ஒரே அறுவை சிகிச்சை வல்லுனரால் ஒவ்வொரு நாளும் ஒரே அளவு சீராகவும் துல்லியமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது.

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த நேரத்தில், நோயாளிகளின் எதிர்பார்ப்பும் ’100 சதவிகிதப் பலன்’ என்று ஆகிவிட்டது. இதை நிறைவேற்றத்தான் இப்போது வந்துள்ளது, ‘கணிப்பொறித் துணை அறுவை சிகிச்சை முறை (கம்ப்யூட்டர் நேவிகேஷன்)’.
முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
”பிரெய்ன் டியூமர், ஸ்கோலியாசிஸ் எனப்படும் முதுகுத் தண்டு வளைதல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைபோன்ற சிக்கலான அறுவைகளுக்கு கம்ப்யூட்டர் நேவிகேஷன் என்ற இந்த கணிப்பொறித் துணை அறுவை சிகிச்சை முறை பெரிய வரப்பிரசாதம். முதுகுத் தண்டுவடம் வளைதல் என்பது குழந்தைகளுக்கு ஏற்படுவது. பொதுவாக ஒருவரைப் பின்னால் இருந்து பார்க்கும்போது முதுகுத் தண்டுவடம் நேராக இருக்கும். ஆனால், அது சிலருக்கு சற்று வளைந்து காணப்படும். 8 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் நார்மலாக இருப்பார்கள். அதன் பிறகு பார்த்தால், கிடுகிடுவென்று முதுகு ஆங்கில எழுத்து ‘எஸ்’ போல வளைந்துவிடும்!
தொடக்கத்தில் 5 முதல் 10 டிகிரி வரை வளைய ஆரம்பிக்கும். குழந்தைகளின் வளர்ச்சி முடிவதற்கு முன்னதாக அது 90 டிகிரிக்கு மேல் வளைந்துவிடும். அப்போது முதுகெலும்புக்குள் உள்ள நரம்புகளை அது முறுக்குகிறது. இதனால், ரத்தக் குழாயில் அடைப்பு, கால் வராமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ரொம்ப வளையும்போது, நெஞ்சுக்கூடும் வளையும். அது இதயம், நுரையீரலை அழுத்தும். இதனால் இந்த உறுப்புகளின் செயல்பாட்டிலும் பிரச்னைகள் வரும். அப்படியே விட்டுவிட்டால், 25 வயதாகும்போது, இன்னும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஸ்கோலியாசிஸ் பிரச்னைக்கு அந்தக் காலத்தில் அறுவை சிகிச்சை கிடையாது. முதுகுத் தண்டு சிக்கலான பகுதி என்பதால், அப்படியே விட்டுவிடுவோம். அதன் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் நிறைய மெட்டல், ஸ்குரூ போட வேண்டும். இதனால், எங்கு அதைப் போட வேண்டும், வேறு ஏதேனும் உறுப்பை அது பாதிக்குமா, கொஞ்சம் இழுத்தால் நரம்பு துண்டிக்கப்பட்டுவிடுமா என்று மிகவும் பயந்து, கவனத்துடன் செய்து வந்தோம்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு கிடையாது. இதனால் 100-ல் ஒன்று இரண்டு பேருக்கு பிரச்னை ஆவதும் உண்டு. ஆனால், இந்த சிக்கலான பிரச்னைக்கு ஒரு நல்லத் தீர்வாக, கம்ப்யூட்டர் நேவிகேஷன் சர்ஜரி வந்து உள்ளது. இது இங்கே வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில், மேலும் நாளுக்கு நாள் முன்னேற்றங்கள் வந்தபடி இருக்கின்றன!
உடலில் எந்த இடத்தில் என்ன நரம்பு, ரத்தக் குழாய்கள், உடல் உறுப்புகள் உள்ளன என்பதை எல்லாம் இது துல்லியமாகக் காட்டிவிடும். இதனால் எங்கு ஸ்குரூ இறக்கலாம் என்பது மருத்துவர்களுக்குத் தெரிந்துவிடுவதால் அறுவை சிகிச்சை எளிமையாகிவிட்டது.
இந்த முறை அறுவை சிகிச்சையில், ‘விக்டர் விஷன் காம்பேக்ட் ஐசோ-சி ஆர்ம்’ என்ற கம்ப்யூட்டர் நேவிகேஷன் கருவி முன்பு நோயாளியைப் படுக்கவைப்போம். அந்தக் கருவியில் இருந்து வரும் சிக்னல், உடலின் உள் அமைப்புத் தோற்றத்தை முப்பரிமாணமாகத் திரையில் காட்டும். அறுவை சிகிச்சைக் கருவி எந்த இடத்தில் உள்ளது, எந்தக் கோணத்தில் உள்ளது, அதற்கும் உறுப்புக்கும் இடைவெளி எவ்வளவு, ஸ்குரூ போடும்போது உறுப்பு, நரம்பு, ஏதேனும் பாதிக்கிறதா என்பதை எல்லாம் துல்லியமாக இது காட்டிவிடும்.
முதுகுத் தண்டில் டியூமர் எடுக்கும் சிகிச்சையிலும் இது பெரிதும் உதவுகிறது. டியூமருக்கும் கருவிக்கும் உள்ள தூரம், எவ்வளவு டியூமரை அகற்றி உள்ளோம், இன்னும் எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களைத் திரையில் காட்டிவிடும். இதைப் பார்த்து, முதுகுத் தண்டுவடத்தை நேராக்கும் அறுவை சிகிச்சையை செய்கிறோம்.
மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, மூளையில் டியூமர் அகற்றம் உள்ளிட்ட சிக்கலான அறுவைகளுக்கும் இந்த கம்ப்யூட்டர் நேவிகேஷனைப் பயன்படுத்தி செய்கிறோம். சரியான, துல்லியமான அறுவை சிகிச்சையுடன், அறுவைக்கான நேரமும் குறைந்துவிடுகிறது. இதில் கதிர்வீச்சு பாதிப்பு எதுவும் இல்லை என்பதும் ஒரு ப்ளஸ்!”

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...