Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 03, 2011

ஈராக்,ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி; ரூ.200 லட்சம் கோடி சேதம்

ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகினர். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்கள் மற்றும் பென்டகன் (ராணுவ தலைமையகம்) மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. அவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா இறங்கியது.
கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இந்த நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றன. இந்த போர்களினால் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா நடத்தி வரும் போர்கள் குறித்து இந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு நடத்தினார்கள். அதில், 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 31,741 பேர் ராணுவ வீரர்கள். அவர்களில் 6 ஆயிரம் பேர் அமெரிக்கர்கள் மற்றும் 1200 பேர் நட்பு நாடுகளின் படை வீரர்கள் ஆவர். இவர்கள் தவிர 9900 ஈராக் கியர்கள், 8800 ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பாகிஸ்தானியர்கள், 2300 அமெரிக்க தனியார் நிறுவனத்தினர் அடங்குவர். சண்டையின்போது 1 லட்சத்து 72 ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஈராக்கில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரும், பாகிஸ்தானில் 35 ஆயிரம் பேரும், ஆப்கானிஸ்தானில் 12 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

இத்தனை பேரை பலி கொடுத்தும் 20 ஆயிரம் முதல் 51 ஆயிரம் தீவிரவாதிகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் காலத்தில் செய்தி சேகரிக்க சென்ற 168 நிருபர்களும், 266 சமூக சேவை ஆர்வலர்களும் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்கா நடத்தி வரும் போரினால் ரூ.200 லட்சம் கோடி சேதம் அடைந்துள்ளன. அதில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று தங்களது ஆய்வறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...