தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 26-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகர் பிரிவு, புறநகர் பிரிவு என இரு பிரிவுகளாக தேர்தல் நடத்தப்படுகிறது. நகர் பிரிவில் மாநகராட்சி, நகராட்சி,
பேரூராட்சிகள், புறநகர் பிரிவில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. நகர் பிரிவில் உள்ள உள்ளாட்சிகளுக்கு வாக்குப்பதிவு
இயந்திரங்களும், புறநகர் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஊராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இப்பணி வரும் 18-ம் தேதிக்குள் முடிக்கப்படும். தற்போது வாக்குசாவடிகள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் வசதிக்காக சரிவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...