Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 14, 2011

விபத்தில் கால் இழந்தவருக்கு இறந்தவரின் கால்களை பொருத்தி சாதனை!

வாலன்ஷியா :
விபத்தில் கால்களை இழந்தவருக்கு இறந்தவரின் கால்களை பொருத்தி ஸ்பெயின் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின்
வாலன்ஷியாவில் உள்ள பிரபல லா பீ மருத்துவமனையில் ஸ்பெயினின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பெட்ரோ கவதாஸ் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. 
சிகிச்சைக்கு பிறகு நோயாளி மெதுவாக உடல்நலம் தேறிவருவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், 48 மணி நேர தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கால் மாற்று ஆபரேஷன் செய்ய கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்பெயின் மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு, இறப்பவர்கள் பற்றிய தகவல்களை மருத்துவ குழுவினர் பெற்று, யாருடைய காலை பொருத்தலாம் என்று ஆராய்ச்சி செய்து வந்தனர். சமீபத்தில் இறந்தவரது கால்கள், இவருக்கு நன்கு பொருந்தும் என்பதால் உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கால்களை தானமாக வழங்க இறந்தவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். 
பாதிக்கப்பட்டவரின் தொடை பகுதியோடு தானமாக பெறப்பட்ட கால் பகுதியை இணைப்பது, இரு பகுதிகளின் எலும்புகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள், தசைகள், தசை நார்கள் ஆகியவற்றை இணைக்கும் சிக்கலான ஆபரேஷன் என்பதால் சிறு தவறுகூட நேர்ந்துவிடாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், உதவியாளர்கள் உள்பட 50க்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். 10 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. நோயாளி குறித்த விவரங்களை இக்குழு தெரிவிக்க மறுத்துவிட்டது. விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்து, செயற்கை (ப்ரோஸ்தடிக் லிம்ப்) கால்களை பொருத்த முடியாமல் அவதிப்பட்டார். சக்கர நாற்காலியில் இதுவரை நாட்களை நகர்த்திய அவர், போதிய ஓய்வு மற்றும் பயிற்சிகளுக்கு பிறகு நடக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோ கவதாஸ், இதற்கு முன்பு 2008 அக்டோபரில் கைகள் மாற்று அறுவை சிகிச்சையை ஸ்பெயினில் நடத்தினார். இது, ஸ்பெயினின் முதல் அறுவை சிகிச்சை என்பதும் உலகிலேயே இரண்டாவது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009 ஆகஸ்டில் ஸ்பெயினில் நடந்த முதல் முக சீரமைப்பு அல்லது மாற்று அறுவை சிகிச்சை நடத்தியவர் பெட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...