Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2011

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை : இன்று முதல் "ஆன்-லைனில்' பதிவு

கடலூர் : அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை "ஆன்-லைனில்' பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,689 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் சரவர பள்ளிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய "ஆன்-லைனில்' வருகைப் பதிவு செய்யும் திட்டத்தை அமல்படுத்த கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் கடந்த 1ம் தேதி நடந்தது. அதில், முதல் கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை "ஆன்-லைனில்' பதிவு செய்யவும், பின்னர் பிற பள்ளிகளுக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி மொபைல் போன் மூலம் வருகைப் பதிவேட்டை கடலூரில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி தலைமை ஆசிரியர்கள் காலை 10 மணிக்கு வருகைப் பதிவேட்டை பதிவு செய்து, அதன் விவரத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை குறிப்பிட்டு தேசிய தகவல் மையத்திற்கு கொடுக்க வேண்டும்.

இதன் விவரங்களை கலெக்டர், சி.இ.ஓ., - டி.இ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் அலுவலக இணைய தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை முதல் கட்டமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு பரிட்சாத்தமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஏற்படும் குறைபாடுகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்த பின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவது உறுதி செய்ய முடியும். இந்த ஆன்-லைன் வருகைப் பதிவு முறை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...